Wednesday, February 29, 2012
Tuesday, February 28, 2012
Monday, February 27, 2012
Sunday, February 19, 2012
பகையூட்டும் மதஅரசியலுக்கு இரையாகாதே,மள்ளர் –இஸ்லாமியர் உறவை சீர்குலைக்காதே
பகையூட்டும் மதஅரசியலுக்கு இரையாகாதே, மள்ளர் –இஸ்லாமியர் உறவை சீர்குலைக்காதே.
கடந்த பிப்ரவரி 7 அன்று திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவிலில் இரு தரப்பு மக்களுக்கிடையில் மோதலும் அதையொட்டிய கலவரமும் நிகழ்ந்ததை
நாம் அறிவோம். இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலோ, இரு மக்கட் பிரிவினர்க்கு இடையிலோ ஏதோவொரு
ஊரில் அல்லது ஒரு நகரத்தின் தெருவில் அவ்வப்போது இது போன்ற மோதல்கள், ஏதோவொரு காரணத்திற்காக நிகழ்ந்துவிடுவது
தமிழகத்தின் வாழ்க்கையாக இருக்கிறது. பல இடங்களில் இம்மோதல்கள் அவ்வூரின் அல்லது
தெருவின் அளவிலேயே முடிந்து விடுகின்றன. சில தருணங்களில் மட்டும் இம்மோதல்கள் பல
பகுதிகளுக்கும் பரவி விடுகின்றன. குறிப்பாகச் சொல்வதெனில், வடமாவட்டங்களில் வன்னியர் சாதியினருக்கும்
ஆதிதிராவிட மக்களுக்கும் இடையிலும்,
தென் மாவட்டங்களில் முக்குலத்து
சமுதாயத்தினருக்கும், தேவேந்திர குல
வேளாளர் சமூகத்தினருக்கும் இடையிலும் மட்டுமே இவ்வகையான பரவலான மோதலால் மட்டுமே
நிகழ்ந்து வந்தன. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் இவ்வகையான மோதல்கள் குறைந்து
வருவது சமூக நல்லிணக்கத்திற்கு நம்பிக்கையூட்டுகின்றன. சமீபத்தில் சங்கரன்கோவிலில்
நிகழ்ந்த இரு தரப்பு மக்களுக்கும் இடையிலான மோதல் அவ்வூரின் எல்லைக்குள்ளேயே
முடிவுக்கு வந்ததும் நிம்மதியைத் தருகின்றது. இசுலாமிய மக்களுக்கும் தேவேந்திர குல
வேளாளர் சமூகத்திற்கும் இடையில் எழுந்த இம்மோதல் கண்டனத்திற்கு உரியது, மட்டுமல்லாமல் தவிர்க்கப்பட வேண்டியதும் ஆகும்.
பன்னெடுங்காலமாக, இரு தரப்பு
மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொல்வதானால், இந்து மதத்தின் சாதி மற்றும் தீண்டாமைக்
கொடுமைகளிலிருந்து விடுபட, இசுலாமிய
மாவட்டங்களில் இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்தியவர்கள் தேவேந்திர குல
மக்களே.இந்துமதக்
கொடுமைகள் இந்துத்துவ அரசியலாகப் பரிணமித்த பிறகு, தமிழகத்தில் இந்துத்துவ அரசியலின்
கூலிப்பட்டாளமாக, அடியாட்களாக
செயல்பட முன்வந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களைச் சேர்ந்தவர்களே.
பார்ப்பனியத்தால் சூத்திரர்கள் என வரையறுக்கப்பட்ட

ஏனைய இந்து
சாதிகளும் மத அடிப்படையில் கலவரத்தில் ஈடுபடும் பிற்படுத்தப்பட்ட சாதியினருடன்
இணைந்து கொள்கின்றனர். பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் இணைந்து கொள்கின்றனர்.
பிற்படுத்தப்பட்ட - சூத்திர சாதிகளை மத அடிப்படையில் இணைப்பதால், இசுலாமிய மக்களும் இந்துத்துவத்திற்கு எதிராக
மத அடிப்படை வாத நோக்கிலேயே சிந்திக்கின்றனர். இந்த இடத்தில் ஒரு உண்மையை உணர
வேண்டும். பட்டியல் சாதிகள் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என அறியப்படும்
உழைக்கும் மக்கள், மத அடிப்படையில்
இந்துக்களாக அறியப்பட்டாலும், அவர்களை சூத்திர சாதியினர் இணைத்துக்
கொள்வதில்லை. மேலும் மத அடிப்படைவாதம் என்ற நோக்கிலும் இந்துத்துவம் என்ற
கருத்தியலிலும் பட்டியல் சாதி மக்கள் ஒரு போதும் இணைவதில்லை. கிறித்துவ மற்றும்
இசுலாமிய மக்களுக்கு எதிரான அணியில் இம்மக்கள் வரலாற்றில் தன்னை விலக்கியே
நிற்கின்றனர், அல்லது கிறித்துவ
மற்றும் இசுலாமிய மக்களுக்குத் துணையாக நிற்கின்றனர். அதிலும் தேவேந்திர குல
வேளாளர் சமூகத்தினரோ, இசுலாமியர்களுடன்
தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கின்றனர். ஒரு தலைமுறைக்கு முன்னர் கூட, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம்
மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் இசுலாத்தைத்
தழுவியிருக்கின்றனர். 1980களில்
நிகழ்ந்த இராமநாதபுரம் சாதி மோதலுக்குப் பிறகு, சில ஆயிரம் எண்ணிக்கையில் தேவேந்திர குல
சமூகத்தினர் இசுலாத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வை ஒட்டி, இராமநாதபுரம் அருகில் உள்ள கூரியர் கிராமத்தைச்
சேர்ந்த காவல்துறையில் பணியாற்றிய சுப்பிரமணியன் என்பவர் இந்து முன்னணி, அமைப்பினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் மட்டுமல்லாமல், கூரியர்
கிராமத்தின் சரிபாதி குடும்பத்தினர், இசுலாமியர்களாக மாறினர் என்பது வரலாறு. இவரது படுகொலையைக்
கண்டித்து,
இராமநாதபுரம்
நகரில் நிகழ்ந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கேரள மாநில மக்கள் ஜனநாயக்க் கட்சியின்
தலைவரும் பார்ப்பனிய அரசுகளால் 15 ஆண்டுகளாக்க் கொடுஞ்சிறையில்
வைக்கப்பட்டிருப்பவருமான, ஒடுக்கப்பட்ட
மக்களின் தோழரும் சகோதரருமான மதானி அவர்களும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர்
சங்கத்தின் நிறுவனரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. ஜான் பாண்டியன்
அவர்களும் கைகோர்த்து கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இருதரப்பு மக்களும்
வெள்ளமெனக் கலந்து கொண்டு, இந்துத்துவ
சக்திகளுக்குத் தங்கள் ஒற்றுமையைப் புலப்படுத்தினர் என்பது வரலாறு. இத்தகைய சமூக
வரலாற்றுப் பின்புலத்தில் சங்கரன்கோவில் மோதலை நாம் அணுக வேண்டும். இந்துத்துவ
சக்திகளின் – பாசிச
அமைப்புகளின் கூலிப்பட்டாளமாகச் செயல்பட, பொருளாதார தற்சார்பும் திராவிடக் கட்சிகளின்
செல்வாக்கும் பெற்றிருக்கும் சூத்திர சாதிகள் தயங்கிவரும் நிலையில் அல்லது
பலவீனமான அணிதிரட்சியாக இருக்கும் நிலையில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வலுசேர்க்க, பட்டியல் சாதிகளை பயன்படுத்தும் நோக்கில், அதை செயல்படுத்தும் சதித் திட்டத்தை சங்பரிவர்
மேற்கொண்டு வருகிறது. பட்டியல் சாதி மக்கள் மற்றும் அவர்தம் அமைப்புகளில் தமக்கான
ஆட்களை உருவாக்கி வருகின்றனர் சங்பரிவார் அமைப்பினர்
தேவேந்திர குல
வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற சமூகங்களிலும் ‘நாம் அனைவரும் இந்துக்கள்’ என்ற முழக்கத்துடன் சமூக விரோதிகளை உருவாக்க
முனைந்துள்ளனர். பார்ப்பனிய இந்துத்துவத்தை விட்டு விலகி நிற்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இச்சூழ்ச்சிக்கு
பலியாகிவிடக்கூடாது. மட்டுமல்லாமல், இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டிய கடப்பாடும்
இம்மக்களுக்கு இருக்கிறதென்பதை மறந்துவிடலாகாது. இசுலாமிய மக்களும் அமைப்புகளும்
கூட இச்சூழ்ச்சியில் வீழ்ந்து விடாமல், ஒடுக்கப்பட்ட மக்களுடன் குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர் சமூகத்துடன் நீண்டகாலமாக
நிலவி வரும் இயற்கையான சமூக ஒற்றுமையைப் பேணி காக்க வேண்டும். இந்துத்துவ
சக்திகளிடம் இரையாகிப் போன ஒருசிலரைத் தவிர்த்து, பெரும்பான்மை பட்டியலின மக்களுடன்
சமூகரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஓரணியில் திரள்வதே, இசுலாமியர் முன்னுள்ள தார்மீகக் கடமையாகும்.
Subscribe to:
Posts (Atom)