Friday, April 18, 2014

மறவாத பிறந்தநாள் நிகழ்வுகள்

ஏப்ரல் -16  2014 

தம் இனம் காக்க வீரம் நிறைந்தத் தனிமனித போர்முறை என்று சொல்லப்படும் உடலில் வெடிமருந்தைப் பொருத்திய தற்கொலையை (self suicide) உலகில் முதல்- முதல் அரங்கேற்றியவர் "மாவீரன் சுந்தரலிங்க குடும்பனர்"... அவர் மரணத்தின் எடுத்துகாட்டே உலக அளவில் ராணுவ தளங்களில் இன்றுவரை பின்பற்ற பட்டுவரும் தற்கொலைப் படையும், கொரில்லா யுத்தமும் ஆகும். இவை எதிரிகளை யுத்தகளத்தில் அழித்தொழிக்கும் ஒரு உத்தியாக இன்றுவரை பயன்படுத்தபட்டு வருகின்றது 

பாஞ்சாலங்குறிச்சி இறுதி கட்ட போரில் ஆங்கிலயேரின் கை ஓங்கிய பொழுது அவர்களின் ஆயுத கிடங்கை அழிக்க திட்டமிட்டு தனது உடலில் வெடிமருந்தை பொருதி ஆயுதகிடங்கில் பாய்ந்து வெடித்து சிதறி வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கை அழித்து தன் உயிரை தியாகம் செய்து உலகின் முதல் தற்கொலைப்படை ,உலகின் முதல் மனித வெடிகுண்டு(worlds first human bomber) என்று உலக வரலாற்றில் தமிழனுக்கு பெருமை தேடிச்சென்ற வெட்டும் பெருமாள் பாண்டியனின் மரபில் வந்த வீரத்தின் பிறப்பிடம் பாஞ்சாலங்குறிச்சி படைத்தளபதி "சுந்தரலிங்கக்குடும்பனார்" பிறந்த தினம் இன்று .



ஏப்ரல் -17 2014

உன் முன்னோர்கள் வெயிலில் காய்ந்து வந்த விர்வையும், சுரண்டலில் பெயரில் வடிந்த ரத்தமுமே உன் உதிரத்தில் சூடேறி உன்னை ஒரு வரலாற்று ஓட்டப்பந்த நாயகியாக அன்று மாற்றியது..அதை அறியாத இந்த நாதியத்த தமிழ்நாடு உன்னை பெண்ணே இல்லை என்றது.... இதை விட வெட்ககேடு எதுவும் இல்லை...தூ.... தூ...... என்று காரி துப்பிவிட்டு செல்லடி, நாங்கள் இழந்த தமிழ்நாட்டு ஓட்டப்பந்த நாயகியே

நண்பர் Spice Senthuzhan அவர்களின் பதிவில் இருந்து 


செங்கல்சூளையில் 50 ரூபாய் தினக்கூலியாய் வேலைபார்த்து பயிற்சிபெற கூட வழியின்றி ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூடி,பின்பு பெண் அல்ல ஆண் என்று புறங்கூறி பதக்கம் பறிக்கப்பட்ட தோழி சாந்தியின்(எதிர்நீச்சல் பெண் ) பிறந்த நாள் இன்று.... திறமை காலில் தான் உள்ளது அதை அரசு கால்களுக்கு இடையில் தேடியது ..வீர மங்கையை வாழ்த்த விரும்பும் நல்ல உள்ளங்களுக்கு - 08105864893




No comments:

Post a Comment