நவம்பர் -25 :
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த கண்டன ஆர்பாட்டம்
தமிழக அரசே!
* செப்-11, பரமக்குடி துப்பாக்கிச் சூடு - சிபிஐ விசாரணைக்கு ஆணையிடு!
* செப்-11, நவம் - 5 நிகழ்வுகளையொட்டி தோழர் சந்திரபோசு உள்ளிட்ட தோழர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகளைத் திரும்பப் பெறு!
* சட்டவிரோதமாக திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
* பரமக்குடி, மதுரை, இளையாங்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, படுகாயமுற்றவர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கு! அரசு வேலை வழங்கு!
* பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டுப் போராடும் தியாகி இமானுவேல் பேரவைத் தலைவர் சந்திரபோசுவை, சாதி வன்மத்துடன் இழிவுபடுத்தியும், காவல்துறை துணையுடன் சாதிக் கலவரத்தைத் தூண்டும் விதத்திலும் சுவரொட்டி ஒட்டும் சமூக விரோதிகள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்!
* தியாகி இமானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்திடு! என வலியுறுத்தி மதுரை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்கொடுமைக்கு எதிரான வழக்குரைஞர் மையம் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் பகவத்சிங் தலைமை வகித்தார். தமிழ்ப்புலிகள் வழக்குரைஞர் திருவள்ளுவன்,
மெய்யப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தங்கராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் ஜாகிர் ஹுசைன், பகுஜன் சமாஜ் கட்சியின் குருவிஜயன், சேரிப்புலிகளின் திலீபன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இராசு, தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கதிர்நிலவன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் விடுதலைச் செல்வன், மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியின் கிருஷ்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ௦) மக்கள் விடுதலையின் மீ.த.பாண்டியன், தியாகி இமானுவேல் பேரவையின் தேவதாஸ், மள்ளர் நாடுவின் சோலை பழனிவேல்ராசன், பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்ப்பித்தன், விடுதலைச் சிறுத்தைகளின் இன்குலாப், கதிர்பாண்டியன், வழக்குரைஞர் சின்னராசு, ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதிய தமிழகத்தின் வழக்குரைஞர் பாஸ்கர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சரவணபாண்டியன், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் வழக்குரைஞர் கேசவன், அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவையின் வினோத் அம்பேத்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். திரளானவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தமிழகப் பெண்கள் கழகத்தின் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment