Thursday, April 23, 2015

உணர்வுகளோடு தென்பட்ட சாஸ்தா இரவு




நேற்று காலை சரியாக ஒன்பது மணியளவில் எனக்கு தூக்கம் கலைந்தது குளியலறை செல்லும்வரை உண்ணாநிலைகுறித்து எந்த எண்ணமோ எனக்கு இருந்ததாக தெரியவில்லை. திடீர் என்று இந்த நாளில் உண்ணாநிலை இருந்துவிட எண்ணம் தோன்ற எனது மனமும் ஒப்புகொண்டது. எனது அறைக்கு சென்று கௌதம் புத்தருக்கு தீபம் ஏற்றி, எனது வணங்கும் முறையை தொடங்கி உண்ணாநிலையை ஆரம்பிதேன் நல்லபடியாக முடித்து முதல்நிலை. சற்று வேலை நிமித்தமாக அருகமையில் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டிய சூழல், அந்த பயணம் முடிந்து மீண்டும் மாலை நேரம் நான் தங்கும் இடம்நோக்கி சென்று மீண்டும் நீரில் நனைந்து கௌதம் புத்தருக்கு தீபம் ஏற்றி அன்றைய நாளின் இறுதிநிலை வணங்கும் முறைக்கு தயார் ஆனேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்னை அறியாமல் மிகவும் கடுமையாக இருந்து அந்த இறுதி வணக்கம் மனநிறைவோடு எழுந்து எனது முகபக்க்ம் நோக்கி வந்தேன். சகோதரன் வெற்றிக்குமரன் மற்றும் எனது அக்கா சந்திரலேகா தங்கள் ஸ்டேட்டஸ்ல் பதிவு செய்தது இன்று “சாஸ்தா கோவிலுக்கு” செல்கின்றோம் என்று, ஒரு கணம் புல்லரித்தது. காரணம் சாஸ்தா வழிபாடு என்பது எனது முன்னோர்களை வணங்கும் ஒரு இரவு வழிபாடு. இது நாள்வரை நான் பௌர்னமிக்கு முந்தைய நாள் என்றுமே நான் கௌதம புத்தரை வணங்கியது இல்லை, ஆனால் நேற்று உண்ணாநிலையில் இருந்து வணங்க எனது மனம் ஏன் ஒப்புகொண்டது. எனது முன்னோர்களை வணங்கும் நாள் அன்று நான் ஏன் கௌதம புத்தரை வணங்கினேன். எனது முன்னோர்களுக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு மனம் தேடுதலை நோக்கி செல்கின்றது
தம்மாம் என்னை வழிநடத்துகின்றது
நமோ புத்தாய......

கொம்பன் பட விமர்சனம் மற்றும் அதன் குறிப்பு


நாடு என்ற கட்டமைப்பு வடிவத்தில் இருந்து ஆரம்பமாகும் திரைப்படம். அரசியல் முடிவுகளை எடுக்க மூன்று ஊர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான(கிராமங்களுக்கன) அரசியல் பிரதிநிதிகளை தேர்வுசெய்ய.. முன்று ஊரும் ஒன்று கூட பிரதிநிதிகள் ஏலம் நடக்கின்றது அந்த ஓட்டுமொத்த ஏலத்தில், அதிக பணத்திற்கு போட்டியீட தயாரக இருக்கும் இரண்டு நபரை தேர்வு செய்து. தாங்கள் வணங்கும் தெய்வம் அந்த இரண்டு நபரில் யாரை தேர்வு செய்கின்றதோ அவரையே அந்த நாடு (கிராமங்களுக்கன) கட்டமைப்பு தலைவராக தேர்வு
செய்யும் ஒரு பெரும் கூட்டம். தனது அதிகாரத்தை வைத்து தங்கள் விரும்பும் நபரை அந்தந்த நாடுகளுக்கு தேர்வு செய்ய அதிகார முடிவெடுக்கும் ஒரு கூட்டமும் இந்த நாடுகளுக்கு மத்திலே வளம்வருகின்றன. அதில் ஊரின் வசம் இருந்து செயல்படும் நபராக கொம்பையா பாண்டிய (காத்திக்) செயல்படுகின்றார் எதிர் தரப்பாக பட்டாசு என்ற பெயரில் (சூப்பர் சூப்ராயன்) நடித்துள்ளார்.
இந்த நாடுகள் என்ற அரசியிலில் சிறிதும் ஒட்டாத ஒரு நபராக வருகின்றார் முத்தையா (ராஜ் கிரண்) மற்றும் அவரின் மகளான பழனி (லக்ஷ்மி மேனன்) இவர்கள் கொம்பன் வசிக்கும் கிராமத்தில் ஒரு இடைவேளி உள்ள ஒரு நிலை அவ்வபோது நடக்கும் பார்வை பரிமாற்றத்தில் இருவருக்கும் ஒரு சாரா காதல் புடிப்பு வேறுண்ட அரம்பாமகின்றது அதே சமயத்தில் தனது மகளுக்கு மருமகனுக்கு தேடுதலில் இருக்கும் முத்தையாவுக்கு கொம்பன் மருமகனாக மாறுகின்றான்.மகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட முத்தையாவுக்கு ஊர்களின் சட்டங்களை என்றுமே எதிர் தரப்பாக அரசியல் ஆசையோடு செயல்படும் நபர்களோடு ஒருகட்டத்தில் செயல்படும் மோதிக்கொள்ளும் கொம்பன் அந்த கூட்டத்தின் பலியிடும் பேச்சுக்கு ஆளாகின்றான் கொம்பன் அதுவரை இந்த (கிராமங்களுக்குள்) நடக்கும் உள்புச்சால் சண்டையை பற்றி அறியாத ஒரு நபரகா வருகின்றார் பட்டாசு என்ற எதிர் தரப்பு பெரியவர்.இந்த மோதலை தெளிவுபட முத்தையா கொம்பனிடம் விசாரிக்கும்போது மாமனார் மருமகன் சண்டை வருகின்றது
தான் செய்த தவறை உணர்ந்த கொம்பன் தனது மாமனார் விட்டிற்கு சென்று , தன்னிடம் கோவப்பட்டு சென்ற தனது தாய்யும், மனைவியையும் அழைத்துக்கொண்டு விடு செல்ல நினைக்கும் போது.. கதையில் ஒரு சிறு மாற்றம்(அந்த எண்ணத்தில் தான் நாம் படம்பார்க்க வேண்டும்) அடைகின்றது. அங்கே வரும் காவல்துறை முத்தையாவை அழைத்து காவல் நிலையம் செல்கின்றது. இந்த நிகழ்வின் பிண்ணனி மர்ம ரகசியத்தை கொம்பனுக்கு தெரியவர, யாருமே செய்ய முடியாத ஒரு பெரிய ராஜதந்திர திட்டத்தை தீட்டி அவரது மாமானர்ருக்கு பக்கபலமாக கொம்பனும் செல்கின்றார் மதுரை மத்திய சிறைச்சலைக்கு. அங்கே தனது எல்லாம் யுத்தியையும் பயன்படுத்தி தனது மாமனாரை மீட்டு வருகின்றார் கொம்பன்.. இந்த பழையகால திட்டத்தில் படுதோல்வி அடைந்த வில்லன் பட்டாசு மற்றும் அவர்களின் கூட்டமும் மீண்டும் முத்தையாவை கொள்ள ஒரு நாள் குறிகின்றது. அந்த நாளில் கொம்பன் தனது மாமனார் முத்தையாவை மீட்டாரா இல்லையா என்பதே அரைமணிநேரம் கிளைமாக்ஸ்
குறிப்பு : உண்மையாக சொல்லவேண்டும் என்றால் கொம்பன் படம் இடைவேளையோடு முடிவடைந்தது விட்டது., இருந்தாலும் தொடர்ந்து எழுத காரணம். ஒரு படைப்பு சாதி வெறி அல்லது சாதி அடையாளத்தை சுமந்து மக்கள் மத்தியில் செல்லும்போது. அந்த படத்தில் வரும் அழுகைகூட நம்மை சிரித்து மகிழ்ச்சி செய்கின்றது. காரணம் இப்படி பட்ட அழுகை கூட ஒரு சாதிக்கு மட்டுமே சொந்தம் என்ற மனத்தத்துவம் பொங்கி எழுகின்றது.

கொம்பன் பட விவகாரத்தில் முகநூல் அரசியல்

(கொம்ப ஒடைக்க வந்தவன்) அவர்களின் பதிவில் இருந்து
கொம்பனுக்கு ஆதரவ ஒரு கோமாளி அறிக்கை விட்டிருக்கு
ஹா ஹா ஹா
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமான் :ஏன் தேவேந்திர குல சமூகத்தில் அறிவார்ந்த பிள்ளைகளே இல்லையா? அறிவிற் சிறந்த பெருமகன்கள் எத்தனையோ பேர் தேவேந்திர குலத்தில் இருக்க,
அந்த துப்பாக்கி எங்க..... ? சும்மா சொல்லி பார்த்தேன்
பரமக்குடியில் துப்பாக்கி சப்தம் கேட்டதும் முதலில் திரும்பிய கார் நம்மளோடது கேள்விப்பட்டேன். இப்போ என்ன தேவேந்திர குல பிள்ளைகள் மீது அவ்வளவு அக்கறை..எப்பா சுட்டுராதிங்க
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சீமான் : ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலுக்கான போராட்டங்களில் அண்ணன் கிருஷ்ணசாமி அக்கறை காட்டினால் எங்கள் எல்லோருக்குமான 'கொம்பன்' நிச்சயம் அவர்தான். 'கொம்பன்' என்றால் உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் அவருக்கே சாலப் பொருந்துவதாக இருக்கும்.

அண்ணன் சீமான் ஆசிர் பெற்ற தேவேந்திர பிள்ளைகள்: சரி- சரி வன்கொடுமை தடுப்பு சட்டம் எல்லாம் போட மாட்டோம், பயப்பட வேண்டாம். அந்த வேல இருக்கமா புடிச்சுகொங்க துப்பாக்கி சத்தம் கேட்க போகுது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பன்' படத்தை மருத்துவர் கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன்.

அண்ணன் சீமான் ஆசிர் பெற்ற தேவேந்திர பிள்ளைகள்: யாருப்பா அங்க, அந்த மைக்க ஆப்பன்னு. கண்டவன் எல்லாம் பேசுறன் பாரு.நீங்க பேசுங்க அண்ணன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இரண்டாம் தேதி படம் வெளியீடு என்றவுடன் கிருஷ்ணசாமி கொடிபிடித்துக் கிளம்பிவருவது ஏனாம்? அன்றைய தேதியில் 'நண்பேன்டா' படம் வெளியாகும் காரணமா?
தேவேந்திர பிள்ளைகள்: இப்போ தான் தெரியுது ஏன் எந்த கட்சியிலும் நம்ம அண்ணனுக்கு உட்கார கூட சீட்டு தரமாட்டிங்குராய்ங்கனு. இந்த மாசம் இரண்டாம் தேதி 'நண்பேன்டா' ஓட மொத்தம் நாலு படம் ரீலிஸ் அதுல ஒண்ணு பிட் படம் கூடனு சொல்லறங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அப்போதே படத்தின் இயக்குநரையோ கதாநாயனையோ அழைத்துப் பேசியிருக்கலாமே... இயக்குவதும் நடிப்பதும் நமது தமிழ்ப் பிள்ளைகள்தானே...
அண்ணன் சீமான் ஆசிர் பெற்ற தேவேந்திர பிள்ளைகள்: இந்தாரு நீ மொத உண்மைய சொல்லு நீ பெரியார் பிள்ளையா இல்ல தமிழ் பிள்ளையா.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அண்ணன் Prabhu Mariner அவர்களின் பதிவில் இருந்து
சீமானே கற்றுக் கொள்
**********************
அமைதி வழியில் சட்ட படி கொம்பன் படத்திற்கு இடைக் கால தடையை பெற்ற எங்கள்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கிருஷணசாமி அவர்களை எப்படி தவறாக விமர்சிக்கலாம்.
.கடந்த 25 வருடமாக அடி தட்டு மக்களுக்கான உரிமையை பெற்று தரவும் மாஞ்சோலைகொடியன் குளம் கண்ட தேவியில் நடைபெற்ற அநீதியை எதிர்த்தும் தனி நபராக போராடி வருகிறார்.
தற்போ து கூட சிமெண்ட் ஆலை தென் மாவட்ட நகரங்களுக்கான இரட்டை ரயில் பாதை, நான்கு வழி சாலைக்காக போரட்டம்நடத்தி வருகிறார். தென் மாவட்ட அணைகளை தூர் வாரவும் கௌரவ கொலைகளை தடுக்கவும்
ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருகிறார்.
தென்மாவட்டங்களில் நடைபெரும் சாதி
கலவரங்களுக்கு துணை நின்ற காவல் அதிகாரிகளை
மாற்றம் செய்தார்.இப்படி எல்லாமே சட்டப்
படி செய்து வரும் எங்க ஊர் சட்ட மன்ற
உறுப்பினரை எப்படி தவறாக விமர்சிக்கலாம்.
எங்க ஊரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.சீவலப்
பேரி கொடியன் குளம் மணியாச்சி
நாரைக்கிணர் கல்லத்திக்கிணர் ஒட்டுடன் பட்டி
லட்சுமி புரம் அக்காநாயக்கன் பட்டி எல்லா
ஊர்களுமே கார்திக் பிரசாந்த் சினிமா
பாடல்களால் கலவர பூமியானது..தேவர் மகன்
சண்டியர் அமரன் போன்ற படங்களால்
நேரடியாகவே பள்ளி பருவத்தில் தாக்கப்
பட்டோம்.அதனால் தான் கொம்பனை ஒரு
மாத காலமாக எதிர்க்கிறோம்..எங்கள் உணர்வை
உணர்ச்சியை அனுபவித்த வேதனையை தெரியாத
நீங்க எல்லாம் தமிழ் தேசிய தலைவரா..திராவிட
சினிமா காரன்களுக்கு செம்பு தூக்கும் நீங்கள்
எப்படி மாற்று அரசியல் பண்ண முடியும்..தேவர் குரு
பூஜைக்கு வக்காலத்து வாங்கிய நீங்கள் ஏன்
இம்மானுவேல் சேகரருக்கு வாங்க வில்லை?.
அதிலேயும் உங்கள் சாதி பாகுபாடு
தெரிகிறது.. தென் மாவட்டங்களில் 100
கொலை விழுந்து விட்டது ,சக தமிழனாய்
நீங்கள் என்ன செய்தீர்கள்..தர்ம பூரி பரம குடி
கலவரங்களுக்கு சக தமிழனாய் என்ன
செய்தீர்கள்..கௌரவ கொலை நடை
பெற்றது சக தமிழனாய் என்ன
செய்தீர்கள்,கடைசியாக தலித் சிறுவன்
வாயில் சிறுநீர் கொடுத்தார்கள் சக
தமிழனாய் என்ன செய்தீர்கள்..இப்படி
எதுவுமே செய்யாத நீங்கள் எப்படி கிருஷ்ண
சாமி அவர்களை விமர்சிக்க முடியும்..உங்கள்
நயவஞ்சத்தை முன்றரே காட்டி வீட்டீர்கள்..
எங்கள்இனம் உங்களுக்கு தக்க பதிலடி தேர்தல் மூலம்
தரும்..ஒன்றுமே இல்லாத நீங்கள் இன்று
கோடிக்கான பணம் எப்படி வந்தது , நீங்கள் எப்படி
நண்பேண்ட படத்திற்காக கொம்பனை
எதிர்க்கிறார் என்கலாம்.உங்கள் பண புத்தி
எங்களுக்கு கிடையாது..எத்தனை சீமான்கள்
வந்தாலும் அடி தட்டு மக்கள் இல்லாமல் தமிழ்
தேசியம் அமையாது..உங்கள் கீழ்த் தரமான புத்தியை
காட்டி வீட்டீர்கள் இனி எங்களது ஒற்றுமை தேர்தல்
களத்திலும் தேவை பட்டால் போர்க் களத்திலும்
காணலாம்..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று கமல் ஹாஸனின் சண்டியருக்கு எதிராக சண்டை போட்ட கிருஷ்ணசாமி, இன்று கொம்பனுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார். இதற்குத்தான் அரசியலுக்கு வந்தாரா கிருஷ்ணசாமி
தேவேந்திர பிள்ளைகள்:: அண்ணன், நீங்க அரசியலுக்கு வந்த பின்னர் தான் உங்களுக்கு போட்டு கொள்ள கருப்பு பணியன்,வேற்று சாதி பொண்ணு, தந்தி தொலைகாட்சி , இப்போ லேட்டஸ்ட்டா முருகன் வேலு என்று எல்லாம் கெடச்சுது. கேட்குறவன் கேன பயனா இருந்தா உங்க ரெண்டு விரலும் AK 47 துப்பகின்னு சொல்லுவிங்க..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்னைகள் கிளப்புவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
நானே பல பிரச்சனைக்கு போராடிக்கிட்டு இருக்கேன் இப்போ வந்து கத்தி சுத்தினு."இந்தாங் அண்ணன் தண்ணி" இவன் அண்ணன் சீமான் ஆசிர் பெற்ற தேவேந்திர பிள்ளைகள்:
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பன் படத்தின் அடிப்படை பிரச்சனை
அடிவாங்கும் நபரின் கையில் சிவப்பு-பச்சை கயிர் அதாவது தேவேந்திர குல வேளார்களின் கொடியின் நிறம்.
இராமநாதபுரத்தில் எங்களை அடிச்சுக்கு யாரு இருக்கா
அதைவிட பெரிய தவறு இந்த கட்சிகளை TRAILERல் வைத்தது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுநாள் வரை தமிழ் சமூகத்தின் "சண்டியராக" இருந்த மருத்துவர் கிருஷ்ணாசாமி. இனி தமிழ்நாட்டின் ஓரே "கொம்பன்" என்ற புது பெயரில் பயணிக்க இருகின்றார்.இந்த விருதை வழங்கிய அண்ணன் சீமயேன் அவர்களுக்கு தேவேந்திர பாய்ஸ் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பல ஆண்டுகளாக சகோதரத்துவதோடு வாழ்ந்து சமூகங்கள் திராவிட அரசியலுக்கு பிறகு தமக்குள்ளே முட்டி மோதி கொண்டது.இந்த இருண்ட காலங்களில் முட்டி மோதிய சண்டையை மட்டுமே சொல்ல இங்க பல திரைப்படம் தேவைப்படுகின்றது. சகோதரத்துவதோடு உறவாடிய ஒரு திரைப்படம் இன்று வரை வந்து இல்லை. அதற்கான ஒரு வழிமுறை இந்த தமிழ் சினிமா தந்து விடாதா என்று இருக்கும் பொழுது நான் கொம்பன், நான் சண்டியர்னு வந்த என்ன அர்த்தம்.
ஒரு இயக்குனர்(caption of the ship) சிறந்த ஒரு சிந்தனையாளராக இருக்கவேண்டும் . சமூக மற்றம் அடைய உதவேண்டும்.அதை தவிர மீண்டும் 1900களில் நாங்கள் வாழ்ந்து என்று எதற்கு உங்கள் சாதியையே பின்னோக்கி கொண்டு செல்கிறீர்கள் என்று தெரியவில்லை.உங்களை போன்ற இயக்குனர்களுக்கு ஒன்றை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும் இதுநாள் வரை ஒரு எதிர் வீனைகூட நீங்கள் தொடர்ந்து எதிரியாக கருதும் சாதிகளிடம் இருந்து வரவில்லை. அப்படியான பதிவுகள் இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் வந்திருக்குமானால். அன்று தேவர் மகன் (இந்த பெயரை சொல்ல விருப்பம் இல்லை) சண்டியராக இருந்து பெயர்மாற்ற பட்ட விருமாண்டி போன்ற படங்கள் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு படைப்பாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்திய திரைப்படம் என்று ஓப்பிடும்போது இன்று பல ஹிந்தி சினிமாவில் சொல்லப்படும் ஒரு சாதாரண அரசியலை கூட இன்று தமிழில் சொல்ல முடியவில்லை என்பது இன்றைய தமிழ் சினிமா துக்கிசுமக்கும் ஒரு பெரிய அவலம் தான்.பாம்பே என்ற பெயர் மும்பை என்று மாற்றம் அடைய ஒரு சினிமா உதவும்போது.ஏன் இன்று வரை தமிழ்மக்கள் அடைந்த யுத்த அவலம் ஒரு நல்ல படைப்பாக உலக அரங்கிள் பேசப்பட வில்லை. நல்ல வேலை குறும்படம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்துவிட்டனர் இல்லை என்றால் தமிழ் சினிமாவில் இருக்கும் அடக்குமுறை ஆட்டம்கண்டுருக்காது.
************************ஆக கொம்பன் படத்தை இன்று தேவேந்திர குல வேளார்கள் மற்றும் நாடார்கள் எதிர்க்க காரணம் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் பேசிய வீடியோ பதிவு **************** ****************************************************************

---------------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பன் படத்தை டாக்டர் கிருஷ்ண சாமி மட்டும் தான் எதிர்க்கிறார் என்று ஒரு சில நபர் நீனைத்து கொள்ளலாம்.அப்படி நினைத்தல் அது உங்கள் அறியாமையின் உச்சம்.
ஒரு ஒரு முறையும் அரசியல் அதிகாரததால் பெற்ற "ஆதிக்கம்" என்று எதை ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் நினைக்கின்றதோ. அந்த சமுகம் அதற்கண் ஒரு தலைமையை தேடி அதில் இருந்து போராடி தனக்கான ஒரு விடுதலையை தேடிகொள்கின்றது. அதற்கு சிறந்த உதாரணங்கள். கொடியங்குளம் கலவரத்திற்கு டாக்டர் கிருஷ்ணசாமி.மேலவளவு கலவரத்தில் அண்ணன் திருமாவளவன். போடி மீனாட்சிபுரம் கலவரத்தில் அண்ணன் ஜான்பாண்டியன். என்று தொடர்ந்து போராடி தங்களுக்கான விடியலை பெற்றுகொள்கின்றனர்.அது போல இன்று கொம்பன் படத்திற்காண தடை என்பது புதிய தமிழகம் கட்சியின் கண்டனம் மட்டும் அல்ல ஓட்டுமொத்த தேவேந்திர குல வேளார்களின் கண்டனத்தின் அடையாளமே என்பதை அரசியல் தெரிந்த நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
.---------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவரை தமிழ் சினிமா செய்த உலக சாதனையை கொம்பன் செய்துவிட்டது.

அந்த உலக சாதனை 72 இடத்தில சென்சார் கட் விழுந்தது மற்றும் 25க்கும் மேற்பட்ட வசனங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
விக்ரம் நடித்த தெய்வத்திருமகன் படத்தின் பெயருக்கு எதிர்ப்பு வந்த போது சீமான் எங்கு சென்றிருந்தார் - டாக்டர் .கிருஷ்ணசாமி
அண்ணன் சீமானின் குரலில்: போய்டேன், போய்டேன் டி கடையில் டி இல்லைனு சொன்னாங்க, அது நாள எண்ணை கடையில் போய் பால் வாங்க போய்டேன்........
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பன் படம் பார்த்த நபரின் கருத்து
கொம்பன் படத்தில் சாதிகளை இழிவாக பேசுவது, சாதி வன்முறை காட்சிகள் போன்றவை இல்லை... படம் பற்றி சொல்லனும்னா... இத்திரைப்படத்தை எடுக்காமலே! இருந்திருக்கலாம்..... படம் குப்பை.... ரொம்ப தலைய வலிக்குது.....
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் சுகாஷ்னி செங்கொடி அவர்களின் பதவில் இருந்து
கொம்பன் பட சர்ச்சையில் புதியதலைமுறை
தொலைக்காட்சியில் கொம்பை உடைத்த தோழர் டாக்டர். கிருஸ்ணசாமி
நாட்டிற்க்குள் நாடு என்னும் கட்டமைப்பில் சிவகங்கை,இராமநாதபுரம்,மதுரை பகுதியில் அரசாங்கத்திற்க்கு எதிரான சமூக விரோத செயல்களா கொலை உட்பட செய்வது இந்த சாதிய கட்டமைப்பே என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார்.
1957 முதுகுளத்தூர் கலவரத்தை மையமாக எடுக்கபட்ட கொம்பன் படத்தை கிருஷ்ணசாமியின் பெரும் முயற்சியால் சினிமா துறையிலே சமூகத்துக்கு எதிரான காட்சிகளுக்காக அதிகபட்சமாக தனிக்கை துறையால் 72 இடங்களில் வெட்டவைக்கபட்டது இப்படமாகதான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
தயாரிப்பாளர்.வெற்றிமாறன் ஆரம்பத்தில் இருந்த ஆனவத்தை இனி ஒவ்வொரு படமும் தனிக்கை சமூகம் சார்பாக செய்ய வைக்கபடும் என்றவுடன் சற்று பின்வாங்கி கொண்டார் என்றே சொல்ல வேண்டும். சினிமா துறைக்கு சவால் விட்ட தோழர் கிருஷ்ணசாமி ML சித்தாந்த பயிற்சி பட்டரையில் வளர்ந்தவர் என்பதை தனது பேச்சின் மூலம் மீண்டும் ஒருமுறை நிறுபித்துள்ளார் என்றே கூற வேண்டும்.
இன்னும் சற்று நேரம் இருந்திருந்தால் சினிமாவில் இருக்கும் சாதி ஆதிக்கத்தை இன்னும் தோல் உரித்து தொங்க விட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.இதே போல் தந்தி தொலைக்காட்சி நேற்று டாக்டரை கூப்பிட்டிருந்தால் பாண்டேயின் சாதிய முகதிரை கிழிக்கபட்டிருக்கும்.
ஊடக தர்மத்திற்க்கு எதிராக நடந்த தந்தி தொலைக்காட்சியை போல் அல்லாமல் சமநிலையுடன் நடந்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு ஏனைய சமூகத்தின் சார்பாக நன்றி நிச்சயம் சொல்ல வேண்டும்.(இக்கட்டூரையை நீண்டூ எழுத நினைத்தேன் நேரமின்மையே காரணமாக முடிய வில்லை)
மள்ளர் விடுதலை முன்னணி
சுகாஷ்னி செங்கொடி
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கமல் சண்டியர்னு தலைப்பு வச்சப்ப டாக்டர் எதிர்த்தார்!
புதுமுகங்கள் சண்டியர் னு தலைப்பு வைக்கும் போது கண்டு கொள்ளவில்லை!!
கமல் நடிச்ச படம் பார்க்க கூட்டம் வரும்,அதே புதுமுகம் நடிச்ச தியேட்டர் லா சைக்கிள் டோக்கன் கூட வாங்க தேவை இல்லை.
இது என்ன அவ்வளவு பெரிய அறிவாளித்தனமான கேள்வியா
----------------------------------------------------------------------------------------------------------------------------------சீமானுக்கு  தமிழ் தெரியாது - டாக்டர் .கிருஷ்ணசாமி
அண்ணன் பேசுங்க அண்ணன், அண்ணன் நல்லா பேசுங்க அண்ணன்,தம்பி அந்த மைக்க ஆன்ல இருக்கணு பாரு. ஓகேவா இப்போ நல்ல பேசுங்க அண்ணன், நல்ல சத்தமா பேசுங்க அண்ணன். என்ன டா கையும், தலையும் மட்டும் இந்த ஆட்டம் அடுத்து சத்தம் மட்டும் வர மாட்டிங்குது.சும்மா இருப்பா அண்ணன் பேச போகிறார்
அண்ணன் சீமானின்: லகலகலக
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்ணன் ஸ்டாலின் தி அவர்களின் பதிவில் இருந்து

டாக்டர் கிருஷ்ணசாமி நடிகர் கார்த்திக்கு எதிராக போராடவில்லை. அது அவருக்குத்தேவையுமில்லை. ஜாதிக்கெதிராகத்தான் அவரது கோவம். அது தேவேந்திரராகப் பிறந்த டாக்டருக்கு மட்டும் இருக்கவேண்டியதல்ல. ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய கோவம்.

‪#‎ஜாதிக்கொம்பன்‬ இருக்கும் வரை ஜாதிக்கெதிரான கொம்பனும் இருப்பான்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய தலைமுறை தொலைகாட்சியில் தெய்வதிருமகன் திரைப்படம் தலைப்பை மாற்றி வைக்க சொன்னபோது சீமான் எங்க போய்டான் என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசியதை சீமானிடம் கேட்க , அண்ணன் தானே "அவன் " என்று சொன்னாரு விடுங்க என்று சொன்னார் என "பில்ட் உப்" கொடுக்குறாங்க போல
பாய்ஸ்: அண்ணன் தான சொன்னார் அவன் என்று நம்ம தலைவர் பெருமிதம் கொள்ளலாம். ஆனா உண்மை அது இல்லை, கடந்த ரெண்டு நாள் முகபுத்தகம் பக்கம் போயிருப்பார் போல அதன் இந்த மற்றம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று கொம்பன் படம் பார்த்துவிட்டேன் விமர்சனம் எழுத இருகின்றேன் ....
ஒன்று மட்டும் சொல்ல ஆசை மருத்துவர் கிருஷ்ணசாமி ஒரு சிறந்த சமூக படத்தொகுப்பாளர் (social editor) என்ற சொல்ல வேண்டும். காரணம் சமூகத்திற்கு எது தேவை என்பதை தனது போராட்ட குணத்தால் வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.. இல்லையென்ற, கொம்பன் ஒரு திரைப்படம் என்று சொல்லி இருக்கமுடியாது.. அது ஒரு வீடியோவடிவில் உள்ள திரைப்பட குருபூஜையாக தான் இருந்துருக்க கூடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கும்கி படத்தில் வரும் யானை பெயர்கூட கொம்பன் அதற்கா அதை ஆதிக்க வார்த்தை என்று சொல்ல முடியுமா- சீமான்
பாய்ஸ்:ஆமா அண்ணன் "கும்கி" படத்தில் வரும் யானை பெயர் "கொம்பன்" . அதை பர்கே பர்கே என்று சொன்னா நகரும்.நீங்க சொன்ன "கொம்பன்" எப்படி பாட்டன்,முப்பாட்டன் என்று சொன்ன நகருமோ.நீ வேற சும்மா இருடா அண்ணன் கோவத்தில் திரும்ப மைக்க புடுச்சு பாட்டேன் பாட்டேனு கத்தி தொலஞ்சுராம..
---------------------------------------------------------------------------------------------------------------------------------


கொம்பன் பட சர்சை ...


மெட்ராஸ் படத்தில் கார்த்திக் வசிக்கும் விட்டில் கூட ஒரு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் படம் இருக்காது. அதுபோல கார்த்திக் எந்த சமுகம் சார்ந்து இயங்ககூடியவர் என்பதை ஒரு திரைப்படம் முழுவதும் மறைக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் கொம்பன் படத்தில் வரும் டிரைலர் கூட கார்த்திக்கின் தோற்றம் முதல் வெட்டி வசனம் வரை ஒவ்வொன்றும் ஒரு அடையாளத்தை வெளிபடுத்தும்
ஒருவேளை கார்த்திக் அவர்கள் இப்படி சுதந்திரமகா அடையாள படவே மெட்ராஸ் என்ற படம் தேவை பட்டதா அல்லது மெட்ராஸ் என்ற கரையை துடைக்க கொம்பன் தேவை படுகின்றதா. இது என்ன கார்த்திக் என்ற நடிகரை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செய்யும் திராவிட அரசியலா.

முக்கிய செய்தி:-கொம்பன் படத்துக்கு இடைகால தடை.


சாதி கலவரம் வராமல் தடுக்க முடியுமா? - நீதிபதியின் கேள்வியால் கொம்பன் வெளியாவதில் சிக்கல்!

கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் வராமல் தடுக்க முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குப் பிறகு படத்துக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது தெரிந்துவிடும். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்‘ பட கதைக்கும் தலைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார். வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால், படத்தை தடை செய்யக் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார். அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கிருஷ்ணசாமி தரப்பு, "இந்தப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படும்," என்று தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரோ, "அப்படி எதுவும் நிகழாது'' என்றார். உடனே நீதிபதி தமிழ் வாணன், "சாதிக் கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?'' என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல் துறையினரிடமும் கேட்டார். இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும். பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார். இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.





கொம்பன் என்ற மாயவலை


இன்று கொம்பன் சர்ச்சை அந்த பட இயக்குனரின் மூந்தய படைப்பை ஒருமுறை சற்று ஆரய்ந்து பார்ப்பது இந்த சுழலில் மிக மிக அவசியம் காரணம் இயக்குனர் முத்தையா அவர்களின் முதல் படம் “குட்டிபுலி” அந்த படத்தை சசிகுமார் தயாரித்து, சசிகுமாரே நடித்து வெளிவந்த படம்.பொதுஜன மக்களால் அடிமட்ட குப்பை என்று சொல்லப்பட்ட படம் கூட. இப்படி இருக்கும் ஒரு நபர் ஸ்டுடியோ கிரீன் சினிமா தயாரிப்பு நிறுவனம் சென்று கதை சொன்னதும். அதை ஏற்றுகொள்ள காரணம், சமீப காலமாக நடிகர் சிவகுமார் அவர்களின் இரண்டாவது மகன் கார்த்திக் அவர்களுக்கு மெட்ராஸ் படத்திற்கு முன்னர் சொல்லி கொள்ளும் அளவில் எந்த படமும் செல்லவில்லை. ஆகையால் இனி நிலம் சார்ந்து படங்கள், அதாவது (பருத்தி வீரன்) ஜாதியம் சார்ந்து சொல்லப்படும் கதைகள் மட்டுமே ஓடக்குடும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் இயக்கபட்ட படமே மெட்ராஸ், சமூக அரசியல் மற்றம் பற்றி பேசும் படம் என்றாலும் ஸ்டுடியோ கிரீன் பொறுத்தவரை அது சாதிய படமே.
இப்போது இயக்குனர் முத்தையா அவர்களின் திரை பிண்ணனியை சற்று ஆராய்வோம் இயக்குனர் முத்தையா திரை நுணுக்கம் உள்ள ஒரு நபர் என்று சொல்ல சற்று சிரமம் தான் காரணம். ஒரு சிலர் திரை கலையை வளர்க படம் எடுப்பர், ஒரு சிலர் தான் வளர்ந்து வந்த பிண்ணனி கலாச்சாரத்தை பதிவு செய்ய திரைப்படம் இயக்குவர்.இப்படி இரண்டாம் சொல்லப்பட்ட இயக்குனர்களை தங்கள் கதை சொல்லும் தளத்தை தெளிவகா வைத்கொள்வர்.அதுவே இயக்குனர்(caption of the ship) என்ற நபரின் அங்கிகாரம்.அந்த அளவில் இயக்குனர் முத்தையாவை ஓப்பிடும்போது “குட்டி புலி” படத்தின் பிண்ணனி எந்த ஊரை சார்ந்து கதை என்பதே அவர்க்கும் குழப்பம், மக்களுக்கும் பெரும் குழப்பம்.காரணம் கதைக்களம் மதுரையா அல்லது ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூரா என்பதே இங்கு பெரிய கேள்விகுறி..

தனது சாதிய கதாநாயகனை வைத்து மற்ற சாதி அடையாளம் அல்லது மற்ற சாதிய கலாச்சார முறையை சீர்குலைத்து அதில் ஊரண்டை இழுப்பது போல காட்சி அமைப்பது. சொந்த ஜாதித்திற்குள் நடக்கும் உயிர்பலி அரசியலை சொல்வதன்மூலம் இயக்குனர் மிகவும் முற்போக்கு குணம் கொண்டவர் என்று தம்மையே அடையாளப்படுத்த நினைப்பது இது போன்று பல குழப்பங்கள் நீறைந்த ஒரு இயக்குனர் தான் முத்தையா.பிறகு அவர் இயக்கி வெளிவர இருக்கும் கொம்பன் படம் மட்டும் எப்படி தேரிய ஒரு திரைப்படமாக இருக்க முடியும்.
கொம்பன் பட கதையின் பிண்ணனி என்ன என்பதை நான் மேலே சொன்ன வரிகளை ஓப்பிட்டு பார்த்தாள் போதும் இவை கதையாக தான் இருக்ககூடும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியும்.உற்றார் உறவினருக்கு பெரும் சண்டை வரும் அவர்கள் இரண்டு தரப்பு நபர்களாக செயல்படுவார்கள் இறுதியில் ஒரு நபர் கொள்ள படுவன் இதுவே கதையா இருக்ககூடும் என்று நாம் படமே பார்க்காமல் சொல்லிவிட முடியும்.
இந்த கதை தளத்தில் கதாநாயகனை (கார்த்திக்கை) வீரன் என்று அடையாளபடுத்த ஒரு சண்டை காட்சி வைத்து அதில் அடிவாங்கும் நபர் கையில் சிகப்பு-பச்சை (தேவேந்திரகுல வேளர்களின் சமூக அடையாளம்) கயிர் அணிந்து இருப்பதும். அதன் பின்ணியில் வரும் வசனம் ராமநாதபுரத்துல “எங்கள அடிச்சுக்க யாருடா இருக்கா” என்ற வீரவசனம் பேசி டிரைளர் தான் இன்று தேவேந்திர குல வேளர்களின் கையில் எடுக்கும் ஆயுதமாக மற்றம் அடைந்து இருக்கின்றது.
சாதி பாகுபாடு வேண்டாம் என்ற பல நிலைகளில் இன்று சமூகம் மாற்றம் அடைந்து வந்தாலும். இது போன்ற தேவையற்ற சர்ச்சை உருவாக்கி தனக்காண ஒரு சூயசாதி விளம்பரம் மற்றும் அடையாளத்தை பதிவு செய்யும் இயக்குனர்கள் மிகவும் ஆபத்தானவர்களே.இது போல சர்ச்சை உண்டாக்கும் நிலையை திறன்பட கண்டறிந்து சாதிய மோதல்களை தடுக்கு பெரும் பணியாற்றிய மாமா மானகிரி செல்வகுமார் செல்வகுமார் அவர்களுக்கு ஓட்டுமொத்த தேவேந்திரகுல வேளார் சமூகமும் கடமைப்பட்டுள்ளது.
இது போல பல கட்சிகள் நாம் கண்களுக்கு தெரியாமல் திரைப்படங்களில் வந்துகொண்டு தான் இருக்கின்றது அதற்கான சிறந்த உதாரனம் “லிங்கா” என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை..மற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்பது போல பல நூறுஆண்டுகள் நிலத்தோடு மட்டுமே வாழ்ந்து வந்த நாம் இன்று தான் தக்க நிலையன் வாழ்வாதாரம் நோக்கி செல்கின்றோம். இதுபோன்ற சர்ச்சை ஒழியவேண்டும் என்றால் நாம் அந்த சர்ச்சை உருவாகும் இடம் நோக்கி பயணிக்க வேண்டும்.அதுவே சிறந்த சமூக மற்றம் மாற்றும் சிறந்த சமூக முன்னேற்றமும் கூட ......

உலககோப்பை 2015

உலககோப்பையை தவர விட்டதும், அதன் பாதிப்பு "கண்ணிராக" முதல் முதலில் ஒரு ஒடுக்கபட்டவணிடம் இருந்தே வெளிப்படுகின்றது. 

1996 அன்று வினோத் காம்ளி 2015 இன்று மகேந்திர சிங் தோனி
--------------------------------------------------------------------------------------------ஒரு பாப்பான கூட எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு ஒடுக்கபட்டவனுக்கு மட்டுமே தெரியும்..

மாக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வினை என்ற தயிர் சாதம் வைத்து வீழ்த்திய மகேந்திர சிங் தோனி.
--------------------------------------------------------------------------------------------
2015 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கூறியுள்ள விமர்சனம் மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருந்து மற்ற ஜாம்பவான்களை ஒப்பிட்டு பார்க்கும்போது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன விராட் கோழி பணம் வாங்கிவிட்டாரா?
ஆரம்பிச்சுட்டாங்க ......
----------------------------------------------------------------------------------------------------------------------------------

Making of KURIYEEDU.

நல்ல வரவேற்பு பெற்ற "குறியீடு காட்சி அமைப்பு உருவான விதம்.Making of KURIYEEDU."
ஆதரவு தந்த அனைத்து நபர்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் செய்யும் ஷேர் எங்களுக்கு தொடர் நல்ல ஆதரவை தரும் என்று நம்புகின்றோம்.
Its complete love base silent movie .Production company:RDC studio ,FIDS studio. Story and Direction:Vinoth misra,Music:Vicky,D.o.p: Rajesh krishan,Art:Fayaz, Editing:Ganesh,Making edit:vicky santhan, Casting:Kathirvel, Vasuki,Jessi,Anurani,Muniyraj,rajiiv.
தயாரிப்பு:அர்.டி.சி ஸ்டுடியோ,பிட்ஸ் ஸ்டுடியோ , இது காதல் கதை சொல்லும் மௌன படம். கதை- இயக்கம் :வினோத் மிஸ்ரா, இசை:விக்கி, ஒளிப்பதிவு:ராஜேஷ் கிருஷ்ணா, கலை:பயாஸ், படத்தொகுப்பு:கணேஷ். உருவான விதம் படத்தொகுப்பு:விக்கி சாந்தன், நடிகர்கள்:கதிர்வேல், வாசுகி,முனியராஜ்,அனுராணி, ஜெசி,ராஜீவ்.