Thursday, April 23, 2015

கொம்பன் பட விமர்சனம் மற்றும் அதன் குறிப்பு


நாடு என்ற கட்டமைப்பு வடிவத்தில் இருந்து ஆரம்பமாகும் திரைப்படம். அரசியல் முடிவுகளை எடுக்க மூன்று ஊர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான(கிராமங்களுக்கன) அரசியல் பிரதிநிதிகளை தேர்வுசெய்ய.. முன்று ஊரும் ஒன்று கூட பிரதிநிதிகள் ஏலம் நடக்கின்றது அந்த ஓட்டுமொத்த ஏலத்தில், அதிக பணத்திற்கு போட்டியீட தயாரக இருக்கும் இரண்டு நபரை தேர்வு செய்து. தாங்கள் வணங்கும் தெய்வம் அந்த இரண்டு நபரில் யாரை தேர்வு செய்கின்றதோ அவரையே அந்த நாடு (கிராமங்களுக்கன) கட்டமைப்பு தலைவராக தேர்வு
செய்யும் ஒரு பெரும் கூட்டம். தனது அதிகாரத்தை வைத்து தங்கள் விரும்பும் நபரை அந்தந்த நாடுகளுக்கு தேர்வு செய்ய அதிகார முடிவெடுக்கும் ஒரு கூட்டமும் இந்த நாடுகளுக்கு மத்திலே வளம்வருகின்றன. அதில் ஊரின் வசம் இருந்து செயல்படும் நபராக கொம்பையா பாண்டிய (காத்திக்) செயல்படுகின்றார் எதிர் தரப்பாக பட்டாசு என்ற பெயரில் (சூப்பர் சூப்ராயன்) நடித்துள்ளார்.
இந்த நாடுகள் என்ற அரசியிலில் சிறிதும் ஒட்டாத ஒரு நபராக வருகின்றார் முத்தையா (ராஜ் கிரண்) மற்றும் அவரின் மகளான பழனி (லக்ஷ்மி மேனன்) இவர்கள் கொம்பன் வசிக்கும் கிராமத்தில் ஒரு இடைவேளி உள்ள ஒரு நிலை அவ்வபோது நடக்கும் பார்வை பரிமாற்றத்தில் இருவருக்கும் ஒரு சாரா காதல் புடிப்பு வேறுண்ட அரம்பாமகின்றது அதே சமயத்தில் தனது மகளுக்கு மருமகனுக்கு தேடுதலில் இருக்கும் முத்தையாவுக்கு கொம்பன் மருமகனாக மாறுகின்றான்.மகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட முத்தையாவுக்கு ஊர்களின் சட்டங்களை என்றுமே எதிர் தரப்பாக அரசியல் ஆசையோடு செயல்படும் நபர்களோடு ஒருகட்டத்தில் செயல்படும் மோதிக்கொள்ளும் கொம்பன் அந்த கூட்டத்தின் பலியிடும் பேச்சுக்கு ஆளாகின்றான் கொம்பன் அதுவரை இந்த (கிராமங்களுக்குள்) நடக்கும் உள்புச்சால் சண்டையை பற்றி அறியாத ஒரு நபரகா வருகின்றார் பட்டாசு என்ற எதிர் தரப்பு பெரியவர்.இந்த மோதலை தெளிவுபட முத்தையா கொம்பனிடம் விசாரிக்கும்போது மாமனார் மருமகன் சண்டை வருகின்றது
தான் செய்த தவறை உணர்ந்த கொம்பன் தனது மாமனார் விட்டிற்கு சென்று , தன்னிடம் கோவப்பட்டு சென்ற தனது தாய்யும், மனைவியையும் அழைத்துக்கொண்டு விடு செல்ல நினைக்கும் போது.. கதையில் ஒரு சிறு மாற்றம்(அந்த எண்ணத்தில் தான் நாம் படம்பார்க்க வேண்டும்) அடைகின்றது. அங்கே வரும் காவல்துறை முத்தையாவை அழைத்து காவல் நிலையம் செல்கின்றது. இந்த நிகழ்வின் பிண்ணனி மர்ம ரகசியத்தை கொம்பனுக்கு தெரியவர, யாருமே செய்ய முடியாத ஒரு பெரிய ராஜதந்திர திட்டத்தை தீட்டி அவரது மாமானர்ருக்கு பக்கபலமாக கொம்பனும் செல்கின்றார் மதுரை மத்திய சிறைச்சலைக்கு. அங்கே தனது எல்லாம் யுத்தியையும் பயன்படுத்தி தனது மாமனாரை மீட்டு வருகின்றார் கொம்பன்.. இந்த பழையகால திட்டத்தில் படுதோல்வி அடைந்த வில்லன் பட்டாசு மற்றும் அவர்களின் கூட்டமும் மீண்டும் முத்தையாவை கொள்ள ஒரு நாள் குறிகின்றது. அந்த நாளில் கொம்பன் தனது மாமனார் முத்தையாவை மீட்டாரா இல்லையா என்பதே அரைமணிநேரம் கிளைமாக்ஸ்
குறிப்பு : உண்மையாக சொல்லவேண்டும் என்றால் கொம்பன் படம் இடைவேளையோடு முடிவடைந்தது விட்டது., இருந்தாலும் தொடர்ந்து எழுத காரணம். ஒரு படைப்பு சாதி வெறி அல்லது சாதி அடையாளத்தை சுமந்து மக்கள் மத்தியில் செல்லும்போது. அந்த படத்தில் வரும் அழுகைகூட நம்மை சிரித்து மகிழ்ச்சி செய்கின்றது. காரணம் இப்படி பட்ட அழுகை கூட ஒரு சாதிக்கு மட்டுமே சொந்தம் என்ற மனத்தத்துவம் பொங்கி எழுகின்றது.

No comments:

Post a Comment