Thursday, April 23, 2015

உணர்வுகளோடு தென்பட்ட சாஸ்தா இரவு




நேற்று காலை சரியாக ஒன்பது மணியளவில் எனக்கு தூக்கம் கலைந்தது குளியலறை செல்லும்வரை உண்ணாநிலைகுறித்து எந்த எண்ணமோ எனக்கு இருந்ததாக தெரியவில்லை. திடீர் என்று இந்த நாளில் உண்ணாநிலை இருந்துவிட எண்ணம் தோன்ற எனது மனமும் ஒப்புகொண்டது. எனது அறைக்கு சென்று கௌதம் புத்தருக்கு தீபம் ஏற்றி, எனது வணங்கும் முறையை தொடங்கி உண்ணாநிலையை ஆரம்பிதேன் நல்லபடியாக முடித்து முதல்நிலை. சற்று வேலை நிமித்தமாக அருகமையில் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டிய சூழல், அந்த பயணம் முடிந்து மீண்டும் மாலை நேரம் நான் தங்கும் இடம்நோக்கி சென்று மீண்டும் நீரில் நனைந்து கௌதம் புத்தருக்கு தீபம் ஏற்றி அன்றைய நாளின் இறுதிநிலை வணங்கும் முறைக்கு தயார் ஆனேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை, என்னை அறியாமல் மிகவும் கடுமையாக இருந்து அந்த இறுதி வணக்கம் மனநிறைவோடு எழுந்து எனது முகபக்க்ம் நோக்கி வந்தேன். சகோதரன் வெற்றிக்குமரன் மற்றும் எனது அக்கா சந்திரலேகா தங்கள் ஸ்டேட்டஸ்ல் பதிவு செய்தது இன்று “சாஸ்தா கோவிலுக்கு” செல்கின்றோம் என்று, ஒரு கணம் புல்லரித்தது. காரணம் சாஸ்தா வழிபாடு என்பது எனது முன்னோர்களை வணங்கும் ஒரு இரவு வழிபாடு. இது நாள்வரை நான் பௌர்னமிக்கு முந்தைய நாள் என்றுமே நான் கௌதம புத்தரை வணங்கியது இல்லை, ஆனால் நேற்று உண்ணாநிலையில் இருந்து வணங்க எனது மனம் ஏன் ஒப்புகொண்டது. எனது முன்னோர்களை வணங்கும் நாள் அன்று நான் ஏன் கௌதம புத்தரை வணங்கினேன். எனது முன்னோர்களுக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு மனம் தேடுதலை நோக்கி செல்கின்றது
தம்மாம் என்னை வழிநடத்துகின்றது
நமோ புத்தாய......

No comments:

Post a Comment