Thursday, April 23, 2015

கொம்பன் என்ற மாயவலை


இன்று கொம்பன் சர்ச்சை அந்த பட இயக்குனரின் மூந்தய படைப்பை ஒருமுறை சற்று ஆரய்ந்து பார்ப்பது இந்த சுழலில் மிக மிக அவசியம் காரணம் இயக்குனர் முத்தையா அவர்களின் முதல் படம் “குட்டிபுலி” அந்த படத்தை சசிகுமார் தயாரித்து, சசிகுமாரே நடித்து வெளிவந்த படம்.பொதுஜன மக்களால் அடிமட்ட குப்பை என்று சொல்லப்பட்ட படம் கூட. இப்படி இருக்கும் ஒரு நபர் ஸ்டுடியோ கிரீன் சினிமா தயாரிப்பு நிறுவனம் சென்று கதை சொன்னதும். அதை ஏற்றுகொள்ள காரணம், சமீப காலமாக நடிகர் சிவகுமார் அவர்களின் இரண்டாவது மகன் கார்த்திக் அவர்களுக்கு மெட்ராஸ் படத்திற்கு முன்னர் சொல்லி கொள்ளும் அளவில் எந்த படமும் செல்லவில்லை. ஆகையால் இனி நிலம் சார்ந்து படங்கள், அதாவது (பருத்தி வீரன்) ஜாதியம் சார்ந்து சொல்லப்படும் கதைகள் மட்டுமே ஓடக்குடும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் இயக்கபட்ட படமே மெட்ராஸ், சமூக அரசியல் மற்றம் பற்றி பேசும் படம் என்றாலும் ஸ்டுடியோ கிரீன் பொறுத்தவரை அது சாதிய படமே.
இப்போது இயக்குனர் முத்தையா அவர்களின் திரை பிண்ணனியை சற்று ஆராய்வோம் இயக்குனர் முத்தையா திரை நுணுக்கம் உள்ள ஒரு நபர் என்று சொல்ல சற்று சிரமம் தான் காரணம். ஒரு சிலர் திரை கலையை வளர்க படம் எடுப்பர், ஒரு சிலர் தான் வளர்ந்து வந்த பிண்ணனி கலாச்சாரத்தை பதிவு செய்ய திரைப்படம் இயக்குவர்.இப்படி இரண்டாம் சொல்லப்பட்ட இயக்குனர்களை தங்கள் கதை சொல்லும் தளத்தை தெளிவகா வைத்கொள்வர்.அதுவே இயக்குனர்(caption of the ship) என்ற நபரின் அங்கிகாரம்.அந்த அளவில் இயக்குனர் முத்தையாவை ஓப்பிடும்போது “குட்டி புலி” படத்தின் பிண்ணனி எந்த ஊரை சார்ந்து கதை என்பதே அவர்க்கும் குழப்பம், மக்களுக்கும் பெரும் குழப்பம்.காரணம் கதைக்களம் மதுரையா அல்லது ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூரா என்பதே இங்கு பெரிய கேள்விகுறி..

தனது சாதிய கதாநாயகனை வைத்து மற்ற சாதி அடையாளம் அல்லது மற்ற சாதிய கலாச்சார முறையை சீர்குலைத்து அதில் ஊரண்டை இழுப்பது போல காட்சி அமைப்பது. சொந்த ஜாதித்திற்குள் நடக்கும் உயிர்பலி அரசியலை சொல்வதன்மூலம் இயக்குனர் மிகவும் முற்போக்கு குணம் கொண்டவர் என்று தம்மையே அடையாளப்படுத்த நினைப்பது இது போன்று பல குழப்பங்கள் நீறைந்த ஒரு இயக்குனர் தான் முத்தையா.பிறகு அவர் இயக்கி வெளிவர இருக்கும் கொம்பன் படம் மட்டும் எப்படி தேரிய ஒரு திரைப்படமாக இருக்க முடியும்.
கொம்பன் பட கதையின் பிண்ணனி என்ன என்பதை நான் மேலே சொன்ன வரிகளை ஓப்பிட்டு பார்த்தாள் போதும் இவை கதையாக தான் இருக்ககூடும் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியும்.உற்றார் உறவினருக்கு பெரும் சண்டை வரும் அவர்கள் இரண்டு தரப்பு நபர்களாக செயல்படுவார்கள் இறுதியில் ஒரு நபர் கொள்ள படுவன் இதுவே கதையா இருக்ககூடும் என்று நாம் படமே பார்க்காமல் சொல்லிவிட முடியும்.
இந்த கதை தளத்தில் கதாநாயகனை (கார்த்திக்கை) வீரன் என்று அடையாளபடுத்த ஒரு சண்டை காட்சி வைத்து அதில் அடிவாங்கும் நபர் கையில் சிகப்பு-பச்சை (தேவேந்திரகுல வேளர்களின் சமூக அடையாளம்) கயிர் அணிந்து இருப்பதும். அதன் பின்ணியில் வரும் வசனம் ராமநாதபுரத்துல “எங்கள அடிச்சுக்க யாருடா இருக்கா” என்ற வீரவசனம் பேசி டிரைளர் தான் இன்று தேவேந்திர குல வேளர்களின் கையில் எடுக்கும் ஆயுதமாக மற்றம் அடைந்து இருக்கின்றது.
சாதி பாகுபாடு வேண்டாம் என்ற பல நிலைகளில் இன்று சமூகம் மாற்றம் அடைந்து வந்தாலும். இது போன்ற தேவையற்ற சர்ச்சை உருவாக்கி தனக்காண ஒரு சூயசாதி விளம்பரம் மற்றும் அடையாளத்தை பதிவு செய்யும் இயக்குனர்கள் மிகவும் ஆபத்தானவர்களே.இது போல சர்ச்சை உண்டாக்கும் நிலையை திறன்பட கண்டறிந்து சாதிய மோதல்களை தடுக்கு பெரும் பணியாற்றிய மாமா மானகிரி செல்வகுமார் செல்வகுமார் அவர்களுக்கு ஓட்டுமொத்த தேவேந்திரகுல வேளார் சமூகமும் கடமைப்பட்டுள்ளது.
இது போல பல கட்சிகள் நாம் கண்களுக்கு தெரியாமல் திரைப்படங்களில் வந்துகொண்டு தான் இருக்கின்றது அதற்கான சிறந்த உதாரனம் “லிங்கா” என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை..மற்றம் ஒன்றே மாறாத ஒன்று என்பது போல பல நூறுஆண்டுகள் நிலத்தோடு மட்டுமே வாழ்ந்து வந்த நாம் இன்று தான் தக்க நிலையன் வாழ்வாதாரம் நோக்கி செல்கின்றோம். இதுபோன்ற சர்ச்சை ஒழியவேண்டும் என்றால் நாம் அந்த சர்ச்சை உருவாகும் இடம் நோக்கி பயணிக்க வேண்டும்.அதுவே சிறந்த சமூக மற்றம் மாற்றும் சிறந்த சமூக முன்னேற்றமும் கூட ......

No comments:

Post a Comment