Thursday, April 23, 2015

தாலி அகற்றம் என்பது பெண் விடுதலையே

தாலி அகற்றம் என்பது சாலையில் செல்லும் பெண்களை அழைத்து வலுகட்டாயமாக உங்கள் மஞ்சள் தாலி கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. திராவிட கழகத்தில் இருக்கும் பெண் தோழர்கள் மற்றும் விருப்பமுள்ள பெண்கள் தங்கள் மணம் உகந்து அந்த வேலி பாசன கயிற்றை அகற்றி வருகின்றானர். இதில் கண்டவன் எல்லாம் வியாக்கானம் சொல்ல என்ன அவசயம் என்ன தகுதி என்று தான் தெரியவில்லை..

ரோட்டில் செல்லும் இரண்டு நாய்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து வைத்து நாங்கள் காதலுக்கு எதிர்ப்பை வெளிப்படுதுகின்றோம் என்ற முட்டாள் தனத்தை பார்த்து பொறுமையாக இருந்த தாலியிஸ்டுகள். பெண்கள் உரிமை மீட்பிள் எந்த மயிரளவு பங்கு உங்களால் எடுக்க முடிந்து எத்தனை குழந்தைகள் பாலியல் தொல்லையால் இறந்து போனதை தடுக்க முடிந்து, எத்தனை சாதிய கற்பழிப்பை, எத்தனை மதம் சார்ந்த கற்பழிப்பை, எத்தனை இனம் சார்ந்த கற்பழிப்பை தடுக்க முடிந்து .

தாலி அகற்றம் குறித்து பேசும் நபர்கள் வெகுவாக பெண்களை அடிமையாக பார்க்கும் எண்ணம் உடையவர்கள்.அல்லது வருணாசிரம முறையில் வளர்ந்த ஹிந்து மதத்தை பேணி காப்பவர்கள்.இதையும் தாண்டி உங்களுக்கு தாலிகள் மீது அக்கறை என்றால் கிறிஸ்துவ திருமணம் சென்று உங்கள் தாலியிஸ்டு கொள்கைகளை பரப்பவும், படுக்கைக்கு மற்றும் தாலியை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்களாவது நிம்மதியாக இருக்கட்டும்.

தந்தை பெரியார் அவர்களை எதிர்த்ததின் வீளைவு

டியர் ஹிந்துத்துவாஸ், நீங்க எங்க போய் "தமிழ் தேசியம்" மற்றும் "தமிழர் தேசியதை" சமிப காலமாக குத்தகைக்கு எடுத்து. அரசியல் என்ற பெயரில் சுத்தி வளைத்து பேசி, "ஹிந்து மதத்தை தமிழ் நாட்டை விட்டு அறவே கருவருத்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை" தொட நினைத்தாலே, அல்லது அப்பாவி பெண்களை வைத்து செருப்பால் அடிக்கவைத்து வேடிக்கை பார்த்தாலோ.. அடி எண்ணமோ உங்களுக்கு தான் சிறப்பா ரதம் ரதமா விழுகுது ..



தமிழ் புலிகள் தோழர்கள்  மற்றும் அருமை சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

ஏப்ரல்-16 மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள்

!!!!!!!!!!!!! ஏப்ரல்-16 மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் !!!!!!!!





ஆங்கில நவாப்புகளின் வரி முறையை எதிர்த்து
படைகட்டிய மண்ணின் முதல் தளபதியே.
தமிழ் மண்ணில் அங்கிலேயர்ரை எதிர்த்த முதல்
பஞ்சாலங்குறிச்சி போர் வாழ்.
சொந்த நாட்டிற்காக தன்னை சுயதற்கொலை(SELF SUICIDE)
செய்து கொண்ட முதல் போர்படை மாவீரன்.
நாட்டை காக்கும் சுயதற்கொலை முயற்சி இந்த மாவீரன் மரணத்திற்கு பின்னரே உலகம் எங்கும் தொடர ஆரம்பித்து
"உலகின் முதல் மனித வெடிகுண்டு"
உம்மை போற்றும் இந்தநாளில், தமிழர்களாக ஒன்றிணைந்து தனிமனிதனை இன்று காவுவாங்கும் "மதவாத, சாதியவாத, இனவாத" நச்சுகளை வேரருப்போம்

வண்மையாக கண்டனம்



                                                வண்மையாக கண்டிக்கின்றோம்
தென் மாவட்டங்களில்பெரும்பான்மையினத்தவராக இருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள், இந்திரனை கடவுளாக மதிப்பவர்கள்,பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்றவர்கள்: இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள்
-அமித்ஷா






##############################################################################################################################################################################
பசுக்களையும் தெய்வமாக வழிபடுகின்றவர்கள் என்ற வரிகளுக்கு மறுப்பு
தேவேந்திர குல வேளாளர்கள் மாடுகளை காப்பாற்ற காரணம் மாடு அவர்களோடு சரிசமமாகா விவசாய சகநண்பன் தவிர அவர்கள் மாடுகளை தெய்வமகா வழிபடவில்லை அவற்றை உணவாக உண்ணவும் இல்லை அதற்கான சிறந்த ஒரு வரலாற்று உண்மை
மாடுகளைக் காப்பாற்றுதல்
நன்செய் விவசாயத்தைத் தங்களது பண்பாட்டு அடையாளமாகவே மாற்றிக் கொண்ட தேவேந்திரர்கள் நிலவுடமைச் சமூக அமைப்பின் முதுகெலும்பாக நின்று பெரும் போராட்டத்தையே நிகழ்த்தவேண்டி வந்தது.கால்நடைச் சமூகத்து பழமைவாதிகளான பிராமணர்களை எதிர்த்த அவர்களது போரரட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.தங்களது விவசாய வாழ்க்கைக்கு முக்கியமாகத் தேவைப்படும் கால்நடைகளை யாகம் என்ற பெயரில் வீணோகொன்று அழிப்பதிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு பெரும் சமூகப் போராட்டத்தையே அவர்கள் நிகழ்த்த வேண்டி வந்தது.
தேவேந்திரர்களின், பிராமணர்களுக்கு எதிரான போரரட்டம்,கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் நிலவுடைமைச் சமூக அமைப்பிற்குமான மோதலாகவே கவனிக்கப்பட்ட வேண்டும்.கால்நடை வளர்ப்பு சமூகப் பிரதிநிதிகளாக பிராமணர்கள் ஒருபக்கமும்,நிலவுடமை சமூக அமைபப்புப் பிரதிநிதிகளாக தேவேந்திரர்கள் மறுபக்கமும் நின்று போராடினார்கள். அதாவது,பழமைக்கும் புதுமைக்கும் இடையே பொருத்த மோதல் உண்டானது. தேவேந்திரர்கள் புதுமையின் பக்கம் நின்று கொண்டிருந்தனர். நெல்லின் அறிமுகத்தாலும்,விவசாயம் என்ற புதியதொழில் முறையின் வளர்ச்சியாலும் சமூகத்தில் இத்தகைய மோதல் உருவான அதே காலகட்டத்தில் தான் பௌத்தம் என்ற சமயம் தனது வேர்களை அகலப்பரப்பி இந்த மண்ணில் தளைக்கத் துவங்கியது. அதற்கு முன்னர் இயற்கையின் காரணிகள் என்று சொல்லகூடிய மேகங்களையும் மழையும் மட்டுமே வணங்கி வந்த தேவேந்திரகுல வேளாளர்கள் பௌத்தத்திற்கு இந்திரன் என்று உருவன் அளவில் பெயர்சுட்டி பௌத்தை பின்பற்ற ஆரம்பித்தனர்.கருத்தியல் ரீதியாய் பிராமணர்களோடு சரிக்கு சரி போராடி வந்த பௌத்தம், நிலவுடமைச்சமூகம் அமைப்பின் மலர்ச்சியால் பிராமணர்களின் கொள்கைகளும்,மூட நம்பிக்கைகளும் வலுவிழந்து வருவதைக் கண்டதும், விவசாயக் குடிகளையெல்லாம் ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யத்துவங்கியது.
ஆதி பௌத்தத்தின் சமூகப் பின்னணியை விளக்கமுனையும் பல்வேறு ஆய்வாளர்களும் இந்த கருத்தை தங்களது நூற்களில் பதிவு செய்துள்ளனர். ‘அரசு’ என்ற நிறுவனத்தின் தோற்றம்,வேளாண்மை என்ற தொழிலின் வளர்ச்சி,நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதிலான மோதல்கள், நிலத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்படும் போர்கள் என்று நிலவுடமை சமூகம் சந்தித்த பல்வேறு இன்னல்களையும், பௌத்த நூற்கள் ஆழமாக விவாதிக்கின்றன.வயிற்றிற்கு சோறிடுதல் எவ்வளவு உன்னதமான செயல் என்பதை விளக்காத பௌத்த நூற்களே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதானால்,வளர்ந்துவரும் புதிய நிலவுடமைச் சமூகத்தின் சமயமாகவே பௌத்தம் தன்னை வளர்த்தெடுத்து வந்துள்ளது.
பிராமணர்களின் பிறவிக் கோட்பாட்டையும் கண்மூடித்தனமாக கண்முடித்தனமாக சடங்காசாரங்களையும், வீணான உயிர்ப்பலியையும் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்திவந்த பௌத்தம்,உருவாகிவரும் புதிய நிலவுடமை சமூகத்தின் குரலாகத் தன்னை மற்றிக் கொன்டதில் வியப்பு ஒன்றும் இல்லை, மூடநம்பக்கைகளால் செய்யப்பட்ட பிராமணியத்தை வெற்றிகொள்வதற்கு, உழைப்பையும் அதன்மூலமான அபரிமிதமான உணவு உற்பத்தியையும் மேன்மைப்படுத்துவதற்கும் தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகவே பௌத்தம் இந்த தருணத்தைக் கணித்தது தேவேந்திரர்களுக்கும் பௌத்தத்திற்குமான உறவு வலுவான ஒன்றாக மாறத்துவங்கியதும் இந்த காலகட்டத்தில் தான் ஏறக்குறைய தேவேந்திரர்கள்,தேவேந்திரர்களாக அடையாளப் படுத்தப்பட்டதும் இந்த காலகட்டத்தில் தான். ’குடும்பன்மார்’ என்ற பாரம்பரிய அடையாளத்தோடு பயிரிடும் பழங்குடிகளாக வாழ்த்து வந்த இந்த சமூகம்,’நெல்’என்ற பயிர்வகையைக் கண்டுபிடித்து,அதனைப் பரந்த அளவில் விளைவிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் தன்னியல்பாக பௌத்தத்தோடு நெருங்கிவரத் துவங்கியது.பிராமணர்களின் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கும் பௌத்தம் தனக்கு சரியான ஆயுதமாக இருக்க முடியும் என்று நம்பியது.அதனால் தனது பண்பாட்டு அடையாளத்தையே கூட பௌத்த நெறிமுறைகளின்படி கட்டமைக்கத் தொடங்கியது.
#############################################################################################################################################################################
இந்திரனை கடவுளாக மதிப்பவர்கள், என்ற வரிகளுக்கு மறுப்பு
கௌதம புத்தருக்கான ஆயிரக்கணக்கான பெயர்களில் ‘இந்திரன்’ என்பதும் ஒன்று. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட முனிவர் என்பதால் புத்தர், ’ஐந்திரன்’ என்று அழைக்கப்பட்டார். ’ஐ’, ’இ’யாக மருவியதால் ஐந்திரன், இந்திரனாக அழைக்கப்பட்டார் .தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார் தொல்காப்பியரை ‘ஐந்திரன் அறிந்தவன்’ என்று பாராட்டுவதை,தொல்காப்பியர் பௌத்த நெறிகளைக் கற்றவர் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.’இந்திரன்’, ‘இந்திரன்’ என்றழைக்கப்பட்ட புத்தர் தெய்வமாக மாற்றப்பட்டபொழுது அவரோடு தொடர்புடைய பல விஷயங்களும் பலவிதமாக மாற்றப்பட்டன. புத்தரின் பிறப்பை அறிவிக்கும் கதையில் இடம் பெறும் ஐராவதம் என்ற வெள்ளை யானை.இந்திரனின் வாகனமாகக் கற்பனை செய்யப்பட்டது. விவசாயத்தை மையப்படுத்திய நிலவுடைமைச் சமூகத்தின் சமயமாக பௌத்தம் கருதப்பட்டதால்,புத்தர்,அதாவது இந்திரன் மழைக்கான தெய்வமாகக் கருதப்பட்டார்.நீர் தானே விவசாயத்திற்கான அடிப்படை! ஆற்றில் புதுப்புனல் புரண்டோடும் காலத்தில் எடுக்கப்படும் கொண்டாட்டம் இந்திரவிழா என்று அழைக்கப்பட்டது.
யானையைப் போலவே வெண்ணிறமும் பௌத்தத்தின் சின்னமாகக் கருதப்பட்டது.அதனால் இந்திரவிழாவின்போது யானையின்மீது வெண்ணிற உடைஉடுத்தி,வெண்சாமரம் வீசி,வெண்குடை பிடித்து இந்திரனை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வருவது இன்றளவும் நடைபெறுகின்றது. ராஜபாளையம் நகரிலுள்ள தேவேந்திரகள் 'நீர்காத்த அய்யனார் என்றழைக்கப்படும் புத்தருக்கு இந்தச் சடங்கை இன்றைக்கும் செய்கின்றார்கள்.
#############################################################################################################################################################################
இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள் என்ற வரிகளுக்கு மறுப்பு
இந்த இடத்தில் அம்பேத்கரின் கட்டுரையொன்று நமக்கு சில வெளிச்சங்களைக் காட்டமுடியும் என்று நினைக்கிறேன் .தீண்டாமையின் தோற்றம் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையொன்று தேவேந்திரர்களைப் புரிந்து கொள்வதில் நமக்குத் துணை செய்யமுடியும் .அந்தக் கட்டுரையில் அம்பேத்கர் ,தீண்டாமைக்கான காரணங்களை தேடத் தொடங்குகிறார் .என்னென்ன காரணங்களுக்காக சில சமுகங்கள் தீண்டப்படாதவை என்று அடையாளப் படுத்தப்படுகின்றன என்று பட்டியலிடத் துவங்குகிறார் .அந்தப் பட்டியல் நீளமானது .அதில் பத்து காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
1.பிராமணர்களின் மேலாண்மையை மறுத்தல் .
2.பிராமணர்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதாவது இந்து குருவிடமிருந்தோ மந்திர உபதேசம் பெறாதிருத்தல் .
3.வேதங்கள் மறுத்தல் .
4.இந்துக் கடவுள்களை வணங்காதிருத்தல் .
5.நல்ல பிராமணர்களைக் குடும்ப புரோகிதர்களாகக் கொள்ளாதிருத்தல் .
6.பிராமணப் புரோகிதர்களை ஏற்றுக் கொள்ளாதிருத்தல் .
7.சைவம் ,வைணவம் இந்துக் கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதது .
8.தொடுதலின் மூலமோ அல்லது அருகாமையில் நெருங்கி வருவது மூலமோ தீட்டை ஏற்படுத்துதல் .
9.இறந்தவர்களைப் புதைத்தல் .
10.மாட்டிறைச்சி உண்பதும் ,பசுக்களுக்கு சடங்குகள் ஏதும் செய்யாமலிருத்தலும்.
அம்பேத்கர் தனது கட்டுரையில் வரிசைப்படுத்தும் காரணங்கள் எவ்வளவு தூரம் தேவேந்திர சமுகத்திற்கு பொருந்தி வருகிறது என்று பார்க்கலாம்.
1.தேவேந்திரர்கள் என்றைக்குமே பிராமண மேலாண்மையை ஏற்றுக்கொண்டதில்லை .
2.பிராமணர்களிடமிருந்தோ,பிற இந்து குருக்களிடமிருந்தோ அவர்கள் மந்திர உபதேசம் பெறுவது இல்லை .
3.வேதங்கள் அவர்கள் கண்டுகொண்டதே இல்லை .
4.அவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குவது இல்லை .
நாட்டுப்புற தெய்வங்களையே கொண்டாடுகிறார்கள்.
5.பிராமணர்கள், அவர்களின் குடும்ப புரோகிதர்கள் அல்ல .
6.பிராமணப் புரோகிதர்களை அவர்கள் ஏற்றுக் கொண்டது இல்லை. தங்களுள் ஒருவரான வாதிரியார்களையே அவர்கள் இதற்காகப் பயன்படுத்திக் கொண்டனர் .
7.சைவம் ,வைணவம் இந்துக் கோவில்களின் உள்ளே இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆகா என்றுமே தேவேந்திரர்கள் சைவ மற்றும் வைணவவத்தை பின்பற்றவும் இல்லை வளர்க்கவும் இல்லை என்ற உண்மை தெரிகின்றது.
8.தொடுதலின் மூலமோ அருகாமையில் நெருங்கி வருவதன் மூலமோ இவர்களால் தீட்டு ஏற்படுவதில்லை .
9.தேவேந்திரர்கள் இறந்தவர்களைப் புதைக்கிறார்கள் .
10.மாட்டு இறைச்சி உண்பது இல்லை;பசுக்களுக்கு சடங்குகளும் செய்வது இல்லை .
இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்கும் .
தேவேந்திரர்கள் ஹிந்துக்கள் இல்லைஎன்பது இந்த பத்து காரணங்களினால் ஆறு காரணங்கள் பிராமணர்களோடு தொடர்புடையன தான் .அடிப்படையில் ,தேவேந்திரர்களின் பண்பாட்டோடு பிராமண எதிர்ப்பு என்பது இருந்து கொண்டே இருக்கிறது என்பதைத் தான் இந்தக் காரணங்கள் சுட்டுகின்றன.
பிறகு எப்படி தேவேந்திர குல வேளாளர்கள் இந்து மதக்கோட்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பவர்கள் என்பது தான் இங்கே மிக பெரிய கேள்வி
ஆக பாஜக தேசிய தலைவரர் அமித்ஷா அவர்களின் பதிவை வண்மையாக கண்டிக்கின்றோம்

அறிவாசன் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் திரைப்படம்



இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகர் மம்மூட்டிஅவர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு திரைப்படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் படம் பார்த்த நாள் முதல் இன்று வரை வெளிப்படுகின்றது.

தந்தை பெரியார் அவர்களை அவமதிப்பி ஒரு திட்டமிட்ட அவசெயல்

கடவுள் என்ற உருவத்தை அன்று செருப்பால் அடித்தார் தந்தை பெரியார்
அதே (ஹிந்து மதம்) செருப்பை வைத்து பெரியாரை அடித்து அவரையும் கடவுளாக மாற்றிய பெருமை தமிழ் சமூகத்திற்கு மட்டுமே சேரும்.
அதுனாலே தான் என்னவோ அன்றே “பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்” என்ற பெயர் உமக்கு வைத்தார்களோ ........

தி.க தொண்டர்களிடம் அடிவாங்கிய ஹிந்து கோஷ்டி
நல்ல வேலை இங்க ஒரு கூட்டம் தெருவுக்குள் வைத்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் புகைப்படத்தை செருப்பால் அடித்தார்கள் இல்லை என்றால் இதே கதி தான் போல ஹா ஹா ஹா.

2015 ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் பிறந்தநாள்

 ஏப்ரல் 14  2015 சென்னையில் இருக்கும் புரட்சியாளர் அம்பேட்கர் அவர்களின் மணிமண்டபத்தில் உலக ஆசானுக்கு  மலையிடும் போது. 

.