Thursday, April 23, 2015

எரியும் பணிக்காடு - அங்கே குளிர் வரும்போது எனக்கும் குளிர்ந்தது, அங்கே பெய்த மழையில் எனது கால்களும் நனைந்தது



நேற்று எரியும் பனிக்காடை மீண்டும் படிக்கச் தொடர்ந்தேன் ஆறுமணிநேர பயணத்தில் என்னால் 90பக்கங்கள் மட்டுமே புரட்ட முடிந்தது. இது ஒரு பெரிய காரியம் என்று சொல்ல நான் முற்பட வில்லை தொடர்ந்து படிந்து வந்தால் அந்த ஆறுமணி நேரத்தில் ஓட்டுமொத்த மீதம் இருக்கும் 150 பக்கங்களை முடித்துருப்பேன்.
படித்து முடிக்க சற்று தமதமாக காரணம் ஒரு களம் நோக்கி நாம் பயணிக்கும்போது அந்த களம் குறித்து நமக்கு முன்னணிபடிவினை இருந்து என்றால் நமக்கு அந்த நாவல் கூட ஒரு ஆவணமாக தென்படும். ஆனால் எந்த ஒரு அனுபவ நோக்கம் இல்லாமல் ஒரு புத்தகம் என்ற பெயரில் நாடும்போது அது படித்து முடிக்கும் ஒரு சுமையாகவே நமக்கு தெரியவரும். ஆனால் எனக்கு இந்த இரண்டு வகையோடு எனது ஓப்பிடை பொருத்தி பரக்கமுடியாது சற்று தமதமாக பக்கங்கள் திருப்ப காரணமகா அமைந்தது.
நான் படித்ததுறையில் கையாளப்படும் சில பயிற்சிமுறை எரியும் பனிக்காடில் பார்க்கமுடிந்தது. அவற்றில் மாதம்தோறும் மாற்றம் அடையும் தட்பவெட்பநிலை, வாழ்வாதார ஜீவனம் குறித்த போராட்டம், குடும்ப உறவுமுறை, உடல் ஆரோக்கிய தரம்,அருகில் இருக்கும் நிர்வாகங்களை பயன்படுத்தும் முறை, ஆங்கில தேசியவாத சுரண்டல் அடக்குமுறை அதன் பின்னியில் செயல்படும் கடும்வரட்சி மற்றும் அதை பயன்படுத்தும் மேஸ்தரிகள் இவற்றில் பயணிக்கும் குழு மாந்தர்கள் மற்றும் தனிமனித அடையாளங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிடும் சில கதாபாத்திரங்கள் என எல்லா நபர்களோடு எதாவது ஒரு முறையில் பயணித்து இருப்பேன் என்றே தோன்றுகின்றது.
மிக குறிந்த கற்பனை ஓட்டம் ஆனால் அவை சொல்லும் உண்மை வேதனை மிக மிக அதிகம். மேஸ்தரிக்கு அவனது நரி கூட்டத்திற்கும் இந்த கூலிகள் என்றுமே தேவடியாமகனே அல்லது தேவடியாமகளே தான். இந்த நரி கூட்டம் தான் கூலிகளுக்கு பஞ்சாயத்து நடத்துகின்றது.. அங்கே இருக்கும் வெள்ளைகார துறைகளுக்கு வேண்டிய நேரத்தில் கரிதுண்டாக சாப்பிப்போடும் எலும்பாக பெண்களை பார்க்கும் குணம், அங்கே பணியாற்றும் எழுத்தார்கள் மத்தியில் உலவிவரும் தமிழர் ஓற்றுமை இப்படி பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஒரு சோக வரலாறுகள்.
உண்மையில் டாக்டர் பி.எச்.டேனியல் செய்த்து ஒரு மகத்தான வரலாற்று பணி அதை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஒரு ஆவணம் இல்லை என்றால் வறுமையின் பிடியில் தமிழன் வாழ்ந்துள்ளான் இங்கே அவன் வறுமை தமிழன் என்பதால் நையபுடைக்கபட்டு, தீயில் சுட்டு தின்னப்பட்டான் என்ற வரலாறு தெரியாமல் போகி இருக்கும்.
மீதம் ஐம்பது பக்கம் இருக்கின்றது எனக்கோ இந்த எரியும் பனிக்காடு பக்கங்களை திருப்பும்போது சமிபத்தில் சுட்டுகொல்லப்பட்ட இருபது தமிழர்களை ஒப்பிட்டு பார்க்கமுடிந்தது, ஒரு அழமான அணுகுமுறை என்வசம் வந்துசென்றது.இருபினும் பொள்ளாச்சியை தாண்டிய குமரி மலையில் குளிர் வரும்போது எனக்கும் குளிர்ந்தது, அங்கே பெய்த மழையில் எனது கால்களும் நனைந்தது


படித்து முடித்தேன் எரியும் பணிக்காடு

ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஓவ்வொ துளி தேநீரிலும் கலந்திருக்கின்றது எமது உதிரம்.......
-ஆதவன் தீட்சண்யா

ஏனோ வள்ளி அந்த கருப்பனை விட்சென்று இருக்ககூடாது என்று மணம் சொல்கின்றது. புத்தம் முழுவதும் அழுகை மற்றும் பினஊர்வலங்கள்.

இது அரசியல் பதிவு

"பெரியார் சிலைகளில் எழுதப்பட்டுள்ள 'கடவுள் இல்லை' என்ற வாசகங்களை 1 மாதத்தில் அழிக்காவிட்டால்,அசிங்கமாக எழுதி வைப்போம்" - எச்.ராஜா
இங்கே டயருக்கு பஞ்சர் ஓட்டும் வேலை இல்லை என்று ஒரு போர்ட் எழுதி போடனும் போல

Douglas Muthukumar பதிவில் இருந்து
இந்தியாவில் ஒருவரும் சைவம் கிடையாது,
நீங்கள் சைவம் என்றால் பால் கூட குடிக்கக்கூடாது,
பால் என்பது பசுவின், ஆட்டின், ஒட்டகத்தின் 
ரத்தத்தில் ஒரு பாதி. பால் என்பது ரத்தம், நீங்கள் ரத்தத்தை குடித்து கொண்டு சைவம் பேசக்கூடாது,
நீங்கள் சைவம் என்றால் எந்த சைவக்
குழந்தையும் தாய்ப்பாலைக் கூட
குடிக்கக்கூடாது

தி.மு.கா , ஆ.தி.மு,காவிற்கு பிறகு தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் கொடி பறக்கும் ஒரே அரசியல் காட்சி விடுதலை சிறுத்தைகள் என்று அண்ணன் சொன்னான் வார்த்தை தமிழகத்தின் அடுத்த தலைநிமிரவு நாங்களே என்று தோன்றுகின்றது 

பாண்டே பாண்டே பாண்டே பாண்டே ........... எங்கு இருந்தாலும் வெள்ளிவிழா கமிட்டியின் சார்பாக மேடையை நோக்கி வருமாரு கேட்டுக்கொள்ள படுகின்றர்....

இந்த கேள்வி தான் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் பண்டே ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டாலும், அந்த கேள்வி நேரம் தனக்கான சந்தேகம் நேரமாகவே கேள்வியாளர் பண்டே எடுத்து கொள்கின்றாறோ என்று தோன்றுகின்றது.
கேள்வியளர்கள், கொஞ்சமாவது (Ground reality ) களஆய்வு நோக்கில் பேச கற்றுக்கொள்ளவும்.இந்த கேள்வி போக்கின் எல்லை, தமிழ் நாட்டில் சென்னை மட்டும் தான் இருக்கின்றது, அங்கே நடக்கும் நிகழ்வு மட்டுமே அரசியல் என்ற எண்ணத்தில் கேள்விகேட்பது மிக தவறு. தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர் கொண்ட மாவட்டம் திருநெல்வேலி .தமிழ் நாட்டின் கலை என்ற ரசனை தன்மையை வளர்த்த தமிழ் மண் மதுரை என்பது வரலாற்று சாட்சிகள்.இதில் தாங்கள் கேட்கும் கேள்வி ஒரு வெகுஜன கேள்வியாக இருப்பது இல்லை.கேள்வி கேட்பவன் எல்லாம் முதல்வன் அர்ஜுன் என்று நீனைத்தால், பார்க்கும் நாங்கள் என்ன அதே அடிமட்ட மக்களா உங்கள் எண்ணத்தில்.
இனியாவது கேள்வியை மாற்றி கேட்க கற்றுக்கொள்ளவும் திரு. பண்டே அவர்களே காரணம் உங்களுக்கு நேற்று அண்ணன் சொன்னது கேள்விக்கான பதில் அல்ல, நேற்று உங்களுக்கு நடத்தப்பட்டது ஒரு நேரடி அரசியல் வகுப்பு.

தமிழர்கள் பிரச்சனை என்பதை தாண்டி பார்த்தால் போரா போக்கில் இனி தமிழகத்தில் இரண்டே கட்சிகள் மட்டுமே தான் இருக்கும் என்று தோன்றுகின்றது ஒன்று வடக்கே விடுதலை சிறுத்தை மற்றும் தெற்கே புதிய தமிழகம் மட்டுமே ...
திராவிடம் ஒளிந்து மீண்டும் ஒரு புதுமறுமலர்ச்சி அடைவோம்


ஓ காதல் கண்மணி யாருக்கு ?


நேற்று வெளியாகி இருக்கும் இயக்குனர் மணிரத்ணம் அவர்களின் ஓ காதல் கண்மணி ஒரு இயக்குனர் இளைஞர்களை நோக்கி இந்த ஏப்ரல் மாதம் எடுத்துவைக்கும் அடுத்தகட்ட காதல் குறித்த திரைப்படம் என்ற எண்ணத்தில் படம் பார்க்க விரும்புகின்றேன். காரணம் இன்றைய தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி இயக்குனர் மணிரத்ணம் அவர்கள் என்ன அரசியல் பேச வேண்டும், யாருக்காக பேசவேண்டும் அவரது ஆடியன்ஸ் யார் என்பதில் மிக தெளிவா இருக்கும் ஒரு நபர். இன்று அவர் எடுக்கும் திரைப்படம் தனக்கான ஒரு வட்டத்தில் இருந்து எதாவது ஒரு சிறு மற்றம் அடைந்து ஒரு தனி ரசிகன் வரை சென்று அடைந்துள்ளத என்பதை பார்க்க மிக அசைபடுகின்றேன். காரணம் தமிழ் சினிமாவில் இவர்கள் சொல்வது தான் சூத்திரம், தமிழ் சினிமா இவர்களை வைத்தே இயங்கும் என்ற பல அறைவேர்காடு விமர்சனம் பரப்புரை இன்றுவரை தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது ஆனால் இவர்கள் வடிவம் கொடுக்கும் மொழி யாரை சென்று அடைகின்றது என்பதே இங்கு கேள்வி.இயக்குனர் எந்த இடத்தில் இருந்து தனது புள்ளியை ஆரம்பிப்பாரோ அங்கே தான் ஓ காதல் கண்மணி இருப்பாள் அதே போல் படமும் அங்கே மட்டுமே விமர்சனமாக பேசப்படும். படம் பார்த்தபின் ஏதாவது புதுமை இருந்தால் கட்டாயம் எழுதுவேன்.

விமர்சனம் 
தான் பார்த்து பழகிய பார்ப்பன குடியின் அன்றாட எதார்த்த வாழ்க்கை இசையால் மடித்து கேமராவில் பதிந்து கொடுக்கப்பட்ட ஒரு கலவை படமே ஓ காதல் கண்மணி.

படத்தின் சிறப்பு அம்சம்.

ஓ காதல் கண்மணியின் தனி சிறப்பு இசைபுயல் எ.ஆர். ரகுமான் மற்றும் கேமரா சிறப்பு என்று சொல்ல முடியவில்லை காரணம் பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் வந்த காட்சி பதிவு மட்டுமே இதன் அடையாளமாக தெரிகின்றது.வழக்கம்போல இதுவும் ஒரு எ கிளாஸ் வாதிகளின் படம் 

விக்ரமை பற்றி சினிமா உலகம்

தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு தலைசிறந்த நடிகர்- மிஸ்கின்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சன் கூறியது .

"விக்ரம் நடித்த 'சாமி' படத்தை சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். 'தூள்' படத்தை 17 முறை பார்த்திருக்கிறேன். விக்ரமுடன் நடிப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த சகாப்த கலைத்துவ புத்தகம்.


பிளாப் நடிகர் என்ற பெயரை ஆரம்பத்தில் இருந்தே சம்பாரித்த விக்ரம் ஒரு சிறந்த மேடைநாடக கலைஞன். எந்த ஒரு கதை களத்தையும் தன்னால் உள்வாங்கி (Adoptable Knowledge) நடிக்கும் ஒரு சிறந்த நடிகன். உதாரணம் பிதாமகன் படத்தின் கதையை பாலா எந்த தளத்தில் இருந்து ஒரு நடிகனிடம் சொல்லி இருக்க முடியும் அதே இயக்குனர் அவன் இவன் படத்தின் கதையை விஷாலிடம் எப்படி சொல்லி இருக்கமுடியும் என்பதை ஓப்பிட்டு பார்ப்பதும் மிக முக்கியம். ஒரு இயக்குனர் உடல் வடிவமைப்பை (CHARACTER DESIGNING ) கொண்டு வந்துவிட முடியும். ஆனால் அதில் இருந்து மிகவும் மாறுப்பட்டது உடல் மொழி (BODY LANGUAGE) இதை இரண்டையும் பொருந்தி நடிப்பவன் தான் (INTELLECTUAL ACTOR ) அந்த வகையில் விக்ரம் ஒரு சிறந்த அறிவுஜீவி நடிகன் என்பது மட்டும் உண்மை. இப்படி ஒரு சிறந்த ஆற்றல் மிக்க ஒரு ஏஜமானை இன்று வரை தமிழ் சினமா சரிவர பயன்படுத்த வில்லை என்ற வருத்தம் என்னை போல பல நெஞ்சகளில் உள்ளது காரணம். பிளாப் நடிகர் என்ற ஒரு பெயரை இன்று ஒரு கதாநாயகன் சுமக்க காரணம் இயக்குனர்கள் மட்டுமே ஒரு சிறந்த நடிகனை வைத்துகொண்டு ஒரு கதைதளத்தை உருவாக்க முடியாத இயக்குனர் வசமே ஒரு நடிகன் பிளாப் நடிகனாக என்ற பெயர் மாற்றம் அடைகின்றான் அதுபோல சினிமா அரசியல் இன்னும் ஒருபடி விக்ரமுக்கு கொடுத்த சறுக்கல்கள் பல பல.இன்னும் காலங்கள் இருக்கின்றது விக்ரம் என்ற கதாநாயகன் நடிகன் என்ற ஒரு மாற்று பாதை நோக்கி தமிழ் சினமாவை கொண்டு செல்ல. நாங்களும் இருக்கின்றோம் எங்கள் விக்ரமோடு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம் சார்