Tuesday, October 11, 2011

இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே

OCT -8:அதிமுக அரசை அகற்றும் வரை ஓயமாட்டோம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தேசிய தலைவர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த 64 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள பரமக்குடியில் நடந்த தலித் படுகொலை போன்று வேறு எங்கும் நடந்ததில்லை. 3 பேரை துப்பாக்கியால் சுட்டும், 3 பேரை தாக்கியும் காவல்துறை கொலை செய்திருக்கிறது. தலித் சமுதாய மக்களை ஆதிக்க சக்திகள் காவல் துறை துணையுடன் பழி வாங்கி வருகிறது. இதற்கு காரணமான முதல்வர் ஜெயலலிதா மீது வன்கொடுமை கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தலித் இனத்திற்கு என்று நாட்டில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும் பரமக்குடி சம்பவத்திற்கு யாரும் முழுமையாக போராடவில்லை. தலித் இன மக்களை அழிக்கும் வகையில் செயல்படும் தமிழகத்தின் இந்த அரசை அகற்றும் வரை இந்திய குடியரசுக் கட்சி போராடும் என்றார்








பரமக்குடி நடந்த பெண்கள் புரட்சி.................

பரமக்குடி நடந்த பெண்கள் புரட்சி.................அடக்குமுறையை உடைக்க ஓங்கி ஏழுந்த ஆயிரம் கைகள் 




OCT  9: துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை போலீசார் வாபஸ் பெறவேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம், அரசு வேலையும், காயம்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். இமானுவேல்சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 2ம் தேதி அனைத்து பிற்பட்ட சமுதாய மக்களையும் சேர்த்து கண்டன பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த உள்ளோம்,‘‘ என்றார்.
























Add caption




















Tuesday, October 4, 2011

கடல் மீன்கள் புகைப்படம்

புகைப்படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள் நான் செய்த களபணிகளை  படம் பார்த்து கதை சொல்லுங்கள்