Friday, March 30, 2012

குழந்தைகளை சீரழிக்கும் சோட்டா பீம்


தற்போது தான் போகோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் “சோட்ட பீம்என்ற கார்ட்டூன் தொடரைப் பார்த்தேன். அதில் ஒரு சிறுவன் மிகவும் அறிவுநிறைந்த மனிதனைப் போல் பேசுகிறான், மற்றவர்களுக்கு முன்னூதாராணம் போல் உள்ளான். ஆனால் அந்த சிறுவன் சட்டை அணிவதில்லை. காவி நிற வேட்டி மட்டும் அணிகிறான். அவனருகே ஒரு பெண் குழந்தை முழு ஆடையுடன் தன் மேனியை மறைத்திருக்கிறாள். அசுர வளர்ச்சியில் உள்ள ஒரு சிறுவன் உள்ளாடை மட்டும் அணிந்திருக்கிறான். அவர்களோடு ஒரு குரங்கும் உள்ளது. இதை விரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என் அண்ணன் மகன் ஸ்டாலின் பிரபாகரன். இரண்டு வயது கூட நிரம்பவில்லை, இதில் பார்ப்பனியத்தின் ஊடுருவல் என்று பார்க்கும் பொழுது ஒரு தெளிவான கருத்துக்களை சொல்பவன், பூனல் போடாத ஒரு ஆரியனாகதான் இருக்க வேண்டுமா? அதுவும், காவி நிற உடையில் தான் அந்த கதாநாயக சிறுவனாக இருக்க வேண்டுமா? அந்த சிறுவனுக்கு விலங்குகளில் குரங்குத்தான் ஆதரவாக செயலாற்ற வேண்டுமா? ஏன் அசுர வளர்ச்சியில் உள்ள ஆண்மகன் உள்ளாடை மட்டும் தான் அணிய வேண்டுமா? அந்த பெண்மணி கையில் விலங்கான மானை மட்டும் தான் ஏந்த வேண்டுமா? இவை அனைத்துமே ஆரியத்தின் சுழ்ச்சி. கார்ட்டூன் வடிவிலும் குழந்தைகளை தாக்க வந்துவிட்டது. அதிலும் கூட ஒரு சிறுவன் சொல்வதுதான் நியாயம், அவனை தான் பின்பற்ற வேண்டும், காலப்போக்கில் அவனையே தொழ வேண்டும் ஆகிய ஆரிய கருத்துக்கள் உங்கள் குழந்தைகளிடம் வராமல் பார்த்துக்கொள்ளவும். குழந்தைகள் மீதுள்ள அக்கறையில் இதை வெளிப்படுத்திகிறேன்.

Friday, March 23, 2012

2012 மார்ச் -5 :தினக்குலி தொழிலார்கள் புரட்சி


                                    சுடர் விட்டெரிந்த தீ பந்தங்கள்

        எழுத்து மற்றும் புகைப்படம் :ம.வினோத் அம்பேத்கர்   M.S.W

இந்த மண்னையும் அதற்கு உதவிய பூமியையும் மாசுபடாமல் காப்பவன் தான் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட இந்த தினக்கூலி பணியாளர்கள். சமூகக் கட்டமைப்பு காரணமாக தொடர்ந்து அவலநிலைக்கு தள்ளப்பட்டாலும், தான் செய்யும் தொழில் மூலம் மிக கண்ணியமான மற்றும் வாழ்வாதார தேவைக்களுக்காக தங்களை தொடர்ந்து அர்பணித்து வருகின்றனர். இவ்வாறு உள்ள நிலையில்தான் இவர்கள் பிறந்து நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வேலை செய்து வருகின்றனர் இதில் நகர்புறம் சார்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் படும் அவல நிலையை பற்றி எடுத்து சொல்லவே நடந்தது மார்ச் – 5, தினக்கூலி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்
இந்த வேலை நிறுத்ததில் தினக்கூலி தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் நிரந்திர துப்புறவு பணியாளர்கள், ஆட்டோ ஒட்டுனர்கள், காண்ட்ராக்டர் பணியாற்றுபவர்கள் அனைவரும் அடங்குவார்கள். இதில் மதுரை என்று கணக்கெடுத்து கொண்டால் கிராமப்புறம் சார்ந்தவர்கள் 1,800 நபர்களும், நகர்புறம் சார்ந்த தொழிலாளர்கள் 2500 நபர்களும் உள்ளார்கள். நகர்புற தினக்கூலி தொழிலாளர்களையும் தெளிவுபட சாதிரீதியாக பிரித்துப்பார்த்தோம் என்றால் அதில் அருந்ததியர்கள் – 45%, குறவர்கள் – 18%, பறையர்கள் – 12%, காட்டுநாயக்கர்கள் – 6% உள்ளடங்குவர், இந்த சதவீகிதத்தை கணக்கெடுத்து பார்த்தோம் என்றால் 81% தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் உள்ளடங்குவர்கள் மீதம் உள்ள 19% அல்லது 144 நபர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் அல்லது சுரண்டல்வாதிகளின் அராஜகங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது போன்ற அவலங்களையும் மாற்றும், புதுபிக்கப்பட்ட மதுரையில் உள்ள 100 வார்டுகளில் நடக்கும் நவீன காலங்களிலும் தனி ஒரு மனிதனை கொத்தடிமை போன்று நடத்துவதை தோழுறித்து காட்டவே தினக்கூலி தொழிலாளிகளின் நடந்த வர்க்க போராட்டம். இதுபோல போராட்டங்கள் அல்லது தொடர் வேலை நிறுத்தம் நடப்பதற்கு சொல்ல முடியாத நிகழ்வுகளும் நடந்த வண்ணமாக தான் உள்ளன. இந்த சுரண்டல்களின் பலகாரணிகள் பிரித்து சேர்க்கப்பட்டது. அவற்றில் கொத்தடிமை முறை, தனிமனித சுரண்டல், ஜாதியத்துவம், பெண் அடக்குமுறை, போன்ற அனைத்து சமூக சீர்கேடுகளும், சிறு சீர்த்திருத்தங்களுமே இந்த வேலை நிறுத்தத்திற்கு படிகல்லாக அமைந்தது. அவலங்களை சீரமைக்கவும், மாற்றங்களை கொண்டு வரவுமே இந்த 23 அம்ச கோரிக்கைகளாக உருவாக்கி போராட வந்தனர். அதற்கான நாளாக மார்ச் – 5 யை தேர்ந்தெடுக்கப்பட்டு போராட்டம் தேதியாக அறிவிக்கப்பட்ட்து. அவர்களின் கோரிக்கைகளை சொல்ல மதுரை “மேங்காட்டு பொட்டல்லை களமாக அமைத்தனர். வேலை நிறுத்தம் அறிவிக்கபட்ட நாள் முதல் ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து சரமாரியாக சுவரொட்டிகள் மதுரையில் வந்து குவியும் வண்ணம் உள்ள நிலை தினக்கூலி தொழிலார்கள்  
போராட்டத்தை ஆதரித்து கணினி இணையத்தில் உள்ள சமூக வலைதளங்களான “பேஸ் புக்-ல்போஸ்டர் களம் மற்றும் “டுவிட்டர்போஸ்டர்கள் ஏற்றி பிரச்சாரமும், மக்களை வார்டு வாரியாக சென்று சந்தித்து பிரச்சாரமும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது மற்றும் அன்று யாரும் தொழிலாளர்கள் பதிவுகளை பதிவு செய்யும் நோட்டுகளின் கையெழுத்திட வேண்டாம் மஸ்டரிக்கு செல்ல வேண்டாம், காலை 6 மணிக்கு நாம் தினக்கூலி தொழிலாளர்கள் அனைவரும் மேங்காட்டு 
பொட்டலில் கூடுவோம் என்ற தொடர் சுவரோட்டி மூலம்     மக்களுக்கு தகவல் சென்று சேர்ந்தது. மார்ச் 5 திங்கள் சூரியன் தோன்றாதவேளை மேர்குரி லைட்டுகள் எரிந்த பொழுது ஒவ்வொருவராக திரண்டனர் தொழிலாளர்கள் நேரப்போக்கில் அணிஅணியாய் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்த வேலைநிறுத்ததில் தொழிலாளர்களுக்கு நிகராக காவல்துறையினரும் கலந்து கொண்ட மக்களை சுற்றி வளம் வந்தனர் 
 (மனதில் தொழிலாளர்களை உளவியல்ரீதியாக சிறு அச்சத்தை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார்கள் போல). நேரம் அதிகமாகி கொண்டு சென்றது தொழிலாளர்களும் அணித்திரள ஆரம்பித்தனர். இவர்களை ஒரணியில் திரட்டிய பெருமை தமிழ்நாடு சுகாதார பணியாளர்  முன்னேற்ற சங்க  மாநில பொது செயலாளர்அம்சராஜ் அவர்களையே இந்த பாராட்டுகளும், பெருமைகளும் சேரும். அவர்களோடு துணை நின்று வரலாற்று சிறப்புமிக்க கிராமப்புற பணியாளர்களின் போராட்டத்தை 11-2-2009 நடத்திய மாநில அமைப்பாளர் கொண்டைவெள்ளை அவர்களையும் இந்த வேலை நிறுத்தத்தின் பாராட்டுமிக்க ஒருங்கிணைப்பாளர்கள். காவல்துறை உயரதிகாரிகள் மூலம் மதுரை ஆணையாளருக்கு தகவல் அனுப்பபட்டு அவர்கள் மேங்காட்டு பொட்டலுக்கு காலை : 7.25 க்கு வந்தனர். அங்கு தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்களுக்கும் ஆணையாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி சங்கத்தின் தங்களது 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரையில் நாங்கள் பணிக்கு திரும்பமாட்டோம் என்று நாங்கள் தொடர் வேலைநிறுத்ததில் ஈடுபடுவோம் என்றும் ஆணையரிடம் கூறினர். இந்த தகவல் மதுரை மேயரை சென்றடைந்தது.அவர் 10 மணி அளவில் அண்ணா மாளிகைக்கு வரும்படி கூறினார். இச்செய்தியை தொழிலாளர்களிடம் எடுத்து கூறிய அம்சராஜ் அவர்கள் நாம் இங்கிருந்து கலைந்து சென்று அண்ணா மாளிகையில் 10 மணிக்கு கூடுவோம் என்றும் மேயர் நம்மை பேச்சுவார்த்தைக்கு வரும்படியும் கூறியுள்ளார் ஆகையால் 
அம்சராஜ்
கொண்டை வெள்ளை
அனைவரும் அங்கு ஒன்றுக்கூடுவோம், நாம் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் நாம் வேலைக்கு திரும்புவோம் இல்லையேல் நாம் வேலை நிறுத்தை தொடர்வோம் என்று கூறி தொழிலாளர்களை வழிநடத்தினார். மேங்காட்டு பொட்டலில் இருந்து அண்ணா மாளிகை நோக்கி தொழிலாளர்கள் தாங்கள் அணிந்துள்ள சீருடைகளோடு நடக்க ஆரம்பித்தனர். அவர்கள் வந்த சாலைகள் அனைத்தும் குப்பைகள் பரவி கிடந்தது, குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்தது. மொத்ததில் மதுரை நகரம் மார்ச் – 5 திங்கள் காலையில் குப்பையில் மிதந்தது.அனைத்து தொழிலாளர்களும் அண்ணா மாளிகை வந்து அடைந்தனர். அலுவலகம் நுழைந்த தொழிலாளர்கள் உணர்ச்சிகளின் கொப்பளிப்பின் நிரம்பியது. சரியாக 9:45 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு வந்தது. இதில், மக்கள் சார்பாக தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்ற சங்கம் மா.அம்ச ராஜ் (மாநிலத் தலைவர்), அ.கொண்டைவெள்ளை (மாநில அமைப்பாளர்), க.பட்டன் (மாநிலத் தலைவர்), தி.முருகேசன் (மாநில பொருளாளர்), மற்றும் ம. வினோத் அம்பேத்கர் (சமூக ஆவலர்), குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்களுக்கு கலந்து கொண்டனர்கள். மேயர் அவர்கள் தலைமையேற்று
  வேலை நிறுத்தத்திற்கான காரணம் மற்றும் 23 அம்ச கோரிக்கைகளை  கேட்க அண்ணன் அம்ச ராஜை அழைத்தனர். மதுரை மாநகராட்சியில் கடந்த காலங்களில் நிரந்தர பணியாளர்களாக 2700 பேர்கள் பணி செய்து வந்தார்கள். அவர்களில் பல பேர்கள் மரணமடைந்து சில பேர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். இதனால் 1300 பணியிடங்கள் (துப்புரவு பணி மட்டும்) காலியாக உள்ளது. காலியான இடத்திற்கு தினக்கூலி ஊழியர்கள் சுமார் 600 பேர்கள் குறைந்த ஊதியத்தில் சுமார் 6 ஆண்டுகளாக பணி செய்து வருக்கின்றவர்களை காலி பணியிடத்திற்கு தினக்கூலி ஊழியர்களை கொண்டு நிரந்தர பணியாளர்களாக நிரப்பவும்,மீதமுள்ள காலிப் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தினக்கூலி அடிப்படையில் ஊழியர்களாக எடுக்க வேண்டியும்
 மேலும் மதுரை மாநகராட்சி 72வது வார்டுகளாக இருந்தது. தற்போது 100 வார்டு வார்டுகளாக இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்டுள்ள வார்டு துப்புரவு பம்ப் ஆப்ரேட்டர் ஊழியர்களுக்கு மாநகராட்சி ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க வேண்டும். அதுபோல் ஆட்டோ ஓட்டுனர் பணி மற்றும் துப்புரவு பணியை தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது தனியாரிடம் கொடுக்கப்பட்டதை ரத்து செய்துவிட்டு நிர்வாகமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். இதுபோன்ற 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 26.12.2011ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாக மூலம் யாரும் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. மேலும் மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல கடந்த 18.01.2012ல் மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் நிர்வாகமும் தொழிற்சங்க நிர்வாகிகளும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்கள். தவிர எந்தவிதமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதுடன் எங்களின் 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகின்ற 05.03.2012ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வதுடன் தாங்கள் இந்த தாழ்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மீதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதும் கருணை வைத்து மேற்காண்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு தங்களை மிக பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட மேயர் அவர்கள் உங்கள் கோரிக்கை அனைத்து ஏற்றுகொள்ள வேண்டியவையே” என்று கூறினார். 3 மாத கால அவகாசத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் அடையும். மதுரை சுத்தத்தில் மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்க காரணம் நீங்கள் தான் ஆகையால் உங்கள் உழைப்பு மக்களின் சுகங்களில் பங்கேற்க கூடியது. அவர்கள் ஆரோக்கியத்தை காக்க கூடியது. ஆகையால் உங்கள் கோரிக்கை அனைத்தும் நிறைவேறும் நீங்கள் பணிக்கு திரும்பலாம் என்று சொல்லி தினக்கூலி தொழிலாளர்கள் வேலை நிறுத்ததை முடித்து வைத்தார். கோரிக்கைகளை ஏற்றமைக்கு அம்ச ராஜ் அவர்கள் நன்றியும், இக்கோரிக்கைகளை வெகு சீக்கிரம் நிறைவேற்றித் தருமாறு கேட்டு கொண்டார். அதன் பின்னர் கூடியிருந்த மக்களிடம் நடந்த பேச்சுவார்த்தை பற்றியும், 23 கோரிக்கை ஏற்றுக்கொண்டதை பற்றியும் மக்களிடம் பதிவு செய்தார். பிந்தைய சந்ததிக்கு அது வரலாற்று பதிவாக அமையும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக பலத்த கரகோஷங்களை காணிக்கையாக்கினர், தன் கோரிக்கையை எடுத்துச் சென்ற தலைவருக்கு மாலை அணிவித்தனர். அவர்களின் கொத்தடிமை முறைக்கும், ஜாதி ஆதிக்கத்திற்கும், பெண் அடக்கு முறைக்கும், தனிமனித சுரண்டலுக்கும் விடுதலை கிடைத்த சந்தோஷத்தில் தம் தலைவனுக்கு வாழ்த்து சொன்னார்கள். குறிப்பாக இந்த போராட்டத்தில் எங்கள் தலித் இயக்கங்களும், தலித் கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை. தொழிலாளர்களுக்கு கற்பிக்கபட்டது, ஓரணியில் ஒன்று சேர்க்கப்பட்டது இதுவே தாழ்த்தப்பட்ட மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க போராட்ட புரட்சி.... ஜெய் பீம். 







Monday, March 19, 2012

2012 - தலித் கலைவிழா

கடந்த சனிக்கிழமை மார்ச் –17 , மதுரையில் நடந்த தலித் கலைவிழா மிக அருமையான பல தாக்கத்தை தந்தது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது       ஒவ்வொரு மாவட்டங்களின் மூலைகளில் தேங்கிக்கிடக்கும் வளங்களை ஒரு பொது மேடையில் வைத்து கௌரவம் செய்வது தான் இந்த தலித் கலை விழா எனபது என் அறிவுக்கு எட்டும் வகையில் அமைந்த ஒன்று. மண்ணின் மைந்தர்கள்  தான் தொடர்ந்து தங்கள் ஓடுக்கபட்ட வாழ்க்கை பாதையிலும்  தொடர்ந்து இந்த இசைக்கலையை பாதுகாக்கும் பாதுகாவலர்கள் என்பதற்கு பல சாட்சிகள் தொடர்ந்து இருந்து வருகின்றது.



























































அந்த மேடையில் பற்பல ஆட்டங்கள் ராஜாராணி-ஆட்டம்,குச்சி-ஆட்டம், கரகாட்டம்,மற்றும் பறைஆட்டம் இதில் குறிப்பாக பறைஆட்டம் பல பரிணாமம் அடைந்தது அனைத்துமே நரம்புகளில் ரத்தப்பாய்ச்சலை உண்டாக்கியது. ஆனாலும் இந்த நிகழ்வு ஒரு பொழுது போக்கும் அம்சமாகவே அமைந்தது இதில் எந்த அரசியலும் பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் கிடையது அந்த அளவிற்கு மக்களில் உண்டான பிளவுகள் மேலோங்கி நின்றது இந்த தலித் கலைவிழாவில்.இனி தலித் அரசியலுக்கு இது போன்ற ஒரு கலை நிகழ்வுக்கு .இனி ஒரு தளத்தை தலித் ஆர்வலர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அமைத்து கொடுத்தல் மட்டுமே சாத்தியமாகும்