Thursday, July 28, 2011

மிளகாய் சம்சாரியின் ஒரு வருட உழைப்பும், நிலைமையும்!




மிளகாய் சம்சாரியின் ஒரு வருட உழைப்பும், நிலைமையும்!

இன்று கள ஆய்வுக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் நானும், என் நண்பர் ஸ்ரீதர் இருவரும் தங்கம்மாள்புரம் சென்றோம். ஸ்ரீதர் அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். நான் எனது பார்வையை ஒரு நபர் மீது நோட்டம் விட ஆரம்பித்தேன் என் காதலியைப் பார்ப்பது போல. அவர் தன¢அன்றாட வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, நான் விசாரணை மூலம் எனது வேலையைக் காட்டத் தொடங்கினேன். அவர் பெயர் பெரியநாயகம், மனைவி அரசம்மாள். அவர் ஒரு சம்சாரி. அவர் முக்குலம் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது அவர் சொல்லித்தான் தெரிந்தது. அவர் சம்சாரியில் மிளகா வகையறா. அவர் சொன்ன தகவல்களை நான் எனக்குப் பிடித்தபடி எனது தலையில் ஏற்றிக் கொண்டேன். அவற்றில் சிலவற்றை நான் சொல்ல விரும்புகிறேன்.

1) சம்பா மிளகாய்

சம்பா மிளகாய் அதிகமான காரம் இருக்கும். குழம்புக்கும் நன்றாக இருக்கும். ஆனால் மழை தாங்கும். வெயில் தாங்காது. இவைதான் சம்பா மிளகாயின் குணங்கள் ஆகும்.

2) குண்டு மிளகாய்

குண்டு மிளகாய் காரம் சற்றுக் குறைவாக இருக்கும். வெயில் தாங்கும். மழை தாங்காது. இவை தான் குண்டு மிளகாயின் குணங்கள் ஆகும்.

மிளகாய் தொழிலில் கையாளும் முறை!

மிச்சமாகும் செண்டை நன்றாக தண்ணீர் தொளித்து சாக்கால் மூடினால் மூன்று நாட்களில் பழமாக மாறிவிடும். பின்னர் அதை மீண்டும் காய வைத்து வத்தலாக மாற்றுவார்கள். இதுவே அவர்கள் கையாளும் முறை ஆகும்.

விவசாயத்தில் ( தொழிலில் ) அவர்கள் சொல்லும் கணக்கு முறைகள்

பத்து ஏக்கர் மிளகாய் விவசாயம் செய்தால் அதற்கு ஆகும் செலவு இரண்டு லட்சம். சம்சாரிக்கு வரும் மிகக் குறைந்த இலாபம் மூன்று லட்சம் தான். அதுவும் மழை பெய்தால் தான். இல்லை என்றால் சில சமயம் அவர்கள் சொன்னது போல கையைக் கடிக்கும். இது தான் அவர்களின் கணிப்பு.

சம்பா மிளகாய் 1 ஏக்கர் = 8 குவிண்டால்

குண்டு மிளகாய் 1 ஏக்கர் = 6 குவிண்டால்

ஒரு மாதம் இரண்டு முறை மிளகாய் பறிக்கப்படும். 5, 6 குவிண்டால் கிடைப்பது வழக்கம்.

சம்சாரியும் மற்றும் அவர் சார்ந்த தொழிலாளிகளும்

இந்த முதல் படத்தில் அவர் கை பார்க்கும் மிளகாய் பத்து நபர்களால் பறிக்கப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு நாள் கூலி நூறு ரூபாய். அவர்களுக்கு மதிய நேரங்களில் தேனீர் வழங்கப்படும் மற்றும் அவர்களுக்கு மிக்சர், வடை போன்ற நொறுக்குத் தீனி வழங்கப்படும்.

இரண்டாவது படத்தில் ஏழு சாக்குகளில் கட்டப்பட்டு இருக்கும் மிளகாய் இருபத்தி நான்கு நபர்களால் பறிக்கப்பட்டது.

1 நபர் கூலி = 100 ரூபாய்

24 நபர்கள் கூலி = 2,400 ரூபாய்

24 தேனீர் = 150 ரூபாய்

1 வடை = 3 ரூபாய்

ஒரு தொழிலாளிககு சம்சாரி செலவிடும் தொகை ரூபாய் 108 முதல் 110 வரை.

அதில் அந்த சம்சாரி மற்றும் அவரது மனைவி அடங்குவர். சம்சாரி மற்றும் அவரது வியாபாரி இருவரும் நல்ல தொடர்பில் உள்ளவர்கள். இந்த தங்கம்மாள்புரத்தில் இரண்டு வியாபாரிகள் உள்ளனர். அவர்களில் யார் அதிக விலை தருகின்றனரோ அவருக்கு முன்னுரிமை தருகின்றனர். சந்தை விலை அறிந்து கொள்ள தினமணி போன்ற நாளிதழ் அவர்களுக்கு உதவி புரிகின்றன.

நாள் 14.6.2011 ( 5.40 to 6.30 ) இடம் : தங்கம்மாள்புரம்

சம்சாரி எனக்கு செலவு செய்த மணித்துளிகள் : 1 மணி நேரம்.




No comments:

Post a Comment