தமிழ் வேந்தன் அவர்களின் பதவில் இருந்து
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் – டாக்டர்.கிருஷ்ணசாமி வேண்டுகோள்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க. கிருஷ்ணசாமி எம்.டி.,எம்.எல்.ஏ. இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
"ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்கள். அதுவும் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். சாதாரணத் தொழிலாளர்களால் கப்பலிலும், விமானத்திலும் செம்மரக் கட்டைகளைக் கடத்த முடியாது. இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டுஅதிகார பின்புலத்துடன் செம்மரக்கட்டை கடத்தலை முக்கிய புள்ளிகள் செய்து வருகின்றனர். இவர்கள் புதுச்சேரி, காரைக்கால், சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக பல ஆயிரம் டன் கணக்கில் செம்மரக் கட்டைகளைக் கடத்துகின்றனர்.
தமிழகத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில் ஈடுபடுவதாக ஆந்திர போலீசார் ஏற்கனவே தமிழக போலீசாரிடம் கூறி உள்ளனர். இது குறித்து திருவண்ணாமலையில் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகும் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளனர்.
தமிழக அரசு நினைத்திருந்தால் இதை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆந்திரா எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தி செம்மரங்களை வெட்டுவதற்கு எல்லை தாண்டிச் செல்லும் தமிழர்களை தடுத்திருக்கலாம். தமிழக அரசு இதை செய்யத் தவறிவிட்டது.

நாங்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களை ஆதரிக்கவில்லை. ஆனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சாதாரண கூலி தொழிலாளர்கள். இவர்களின் பின்புலத்தில் பலர் உள்ளனர். அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த சம்பவத்தில் உண்மையைக் கொண்டுவருவதற்கு உச்சநீதி மன்றத்தின் அமர்வு நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைத்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து நான் பேசியபோது குறுக்கிட்ட வனத்துறை அமைச்சர், அப்படியெதுவும் நடக்கவில்லை என்றுக் கூறினார். ஆனால் தமிழகத்திலும் செம்மரக்கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே போன்று தமிழகத்தில் பாயும் தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் மணல் கடத்தல், கனிம வளங்களை திருடுதல் ஆகிய செயல்களும், அவற்றைத் தடுக்கும் நேர்மையான அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே தமிழக அரசு தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.

பிரபு ஜீவன் அவர்களின் பதிவில் இருந்து
தமிழகத்தில் 18பேரை போலீசார் அடித்துக் கொன்ற தாமிரபரணி படுகொலை நடந்தபோது தமிழக,அகில இந்தியக் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனவா?
மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள் அவர்கள்.
ரமேஷ் பாபு அவர்களின் பதிவில் இருந்து
திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரும் தமிழர்கள் - கூலித் தொழிலாளர்கள் - பழங்குடியினர். அவர்களில் யாரும் செம்மரக் கடத்தல்காரர்கள் அல்ல, அனைவரும் கூலிக்காக மரம் வெட்ட வந்தவர்கள்தான் என்று அந்த மாநில காவல்துறை அதிகாரியே கூறியிருக்கிறார்.
அவர்களுக்கு செம்மரங்களை வெட்டக்கூடாது என்பதும், அதன் முக்கியத்துவமும் தெரியாது. சட்டத்தின் ஆட்சி பற்றி கூறும்போது “இக்னரன்ஸ் ஆஃப் லா இஸ் நாட் அன் எக்ஸ்கியூஸ்” - அதாவது சட்டம் தெரியாது என்று கூறி தப்ப முடியாது - என்ற ஒரு கொடூரமான மேற்கோள் அடிக்கடி குறிப்பிடப்படும். சட்டம் என்னவென்றே தெரியாதவர்கள் அதை மீறுகிறார்கள் என்று கூறி தண்டனை அளிப்பதில் என்ன நாகரிகம் இருக்கிறது?
வனம்தான் இவர்களது பூர்வீகம். பாரம்பரியமான இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நகரக் குடிசைப்பகுதிகளுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் விரட்டப்பட்டவர்கள் இவர்கள். இயற்கையாக விளைகிற மரங்களை வெட்டுவது பாவம் என்று சொன்னால் கூட இவர்களுக்குப் புரியும் - காலங்காலமாக வனத்தைப் பாதுகாத்து வந்தவர்கள் பழங்குடி மக்கள்தான். ஆனால் மரத்தை வெட்டுவது குற்றம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே புரியாதவர்களுக்கு, அதைப் புரிய வைக்க மத்திய -மாநில அரசுகள் செய்தது என்ன?
இந்த மக்களை வெளியேற்றி, இவர்களது நிலங்களைக் கைப்பற்றி, இவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை. பெரும் நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக்குவியலை உடைத்து உழைப்பாளிகளுக்கு விநியோகிப்பது என்ற கொள்கை கைகழுவப்பட்டு, விவசாயிகளிடம் பரவலாக இருக்கும் துண்டு நிலங்களைக் கைப்பற்றி கார்ப்பரேட்டுகளிடம் குவிக்கிற மத்திய அரசின் கொள்கைதான் கடந்த கால் நூற்றாண்டாக திணிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி பூர்வீக நிலத்தை இழந்து பிழைக்க வந்திருக்கிறவர்களுக்கு பாதுகாப்பும் வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வனப்பகுதிக்குள் வந்தால் சுட்டுக்கொல்ல ஆந்திரா அரசு ஆணையிட்டிருக்கிறபோது அதை இந்த மக்களிடம் விளக்கி, மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசும் தவறியிருக்கிறது. அதனால்தான் செம்மரக் கடத்தல்காரர்களின் ஏஜெண்டுகள் பெரும் பணம் கூலியாகக் கொடுக்கிறபோது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் செல்கிறார்கள். மக்களைக் காப்பதில் மத்திய - மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டன என்பதன் வெளிப்பாடுதான் இது.
அதே போல் இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமயச் சூழலில் உலகின் பல பகுதிகளிலும் இனவாத, மதவாத வலதுசாரி சக்திகள் முனைப்புப் பெற்று வருகின்றன. இந்தியாவில் அது மதவாதமாக சாதியவாதமாக இனவாதமாக வெளிப்படுகிறது. மாற்றங்களுக்கான போராட்டங்களிலிருந்து மக்களை அது வெகுதூரம் பின்னுக்கு இழுக்கிறது என்ற ஏக்கம் எனக்கு உண்டு. ஆந்திரா காவல்துறையினரும் வனத்துறையினரும் கூலித்தொழிலாளர்களான தமிழர்களைத் தாக்கியதில், அங்கே வளர்க்கப்படுகிற இன வெறுப்பும் கலந்தே இருக்கிறது. அதற்கு எதிர்வினையாக இங்கேயும் இது இன மோதலாக வெடிக்கும் என்பது போன்ற, ஆந்திரத் தெலுங்கு மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக பிரதிபலிக்கிறது. இப்படி கூறுபோடப்படுவதில் சுரண்டல் சக்திகளும் ஆதிக்க சக்திகளும் குளிர்காய்கின்றன.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசியல் உறுதி இருக்குமானால் உளவுத்துறையை முறையாகப் பயன்படுத்தி உண்மையான செம்மரக் கடத்தல் முதலாளிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறவர்களும் ஏஜென்டுகளும் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கறுப்புப் பணப் பேர்வழிகளின் பெயர்களை வெளியிடவும் இன்றைய அதிகார எந்திரம் தயாராக இல்லை, இப்படிப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சொல்லவும் தயாராக இல்லை.
மரம் வெட்டியவர்கள் தாக்கினார்கள் அதனால்தான் எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று என்று காவல்துறையினர் சொல்வதை ஒரு வாதத்திற்காக ஏற்பதானால், அப்படி உண்மையாகவே ஒரு மோதல் நடந்திருக்குமானால் ஓரிருவராவது உயிரோடு பிடிபட்டிருப்பார்கள். ஆனால் 20 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். நடந்த சம்பவத்திற்கு சாட்சி யாரும் கிடையாது. ஆகவே, காவல்துறையினரும் வனத்துறையினரும் என்ன பதிவு செய்கிறார்களோ அதுதான் குற்றப்பத்திரிகை ஆவணமாக நீதிமன்றத்திற்குச் செல்லும். அதை விசாரிக்கிற நீதிமன்றம் என்ன தீர்ப்புச் சொல்லும்? - அ.குமரேசன்
அவர்களுக்கு செம்மரங்களை வெட்டக்கூடாது என்பதும், அதன் முக்கியத்துவமும் தெரியாது. சட்டத்தின் ஆட்சி பற்றி கூறும்போது “இக்னரன்ஸ் ஆஃப் லா இஸ் நாட் அன் எக்ஸ்கியூஸ்” - அதாவது சட்டம் தெரியாது என்று கூறி தப்ப முடியாது - என்ற ஒரு கொடூரமான மேற்கோள் அடிக்கடி குறிப்பிடப்படும். சட்டம் என்னவென்றே தெரியாதவர்கள் அதை மீறுகிறார்கள் என்று கூறி தண்டனை அளிப்பதில் என்ன நாகரிகம் இருக்கிறது?
வனம்தான் இவர்களது பூர்வீகம். பாரம்பரியமான இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நகரக் குடிசைப்பகுதிகளுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் விரட்டப்பட்டவர்கள் இவர்கள். இயற்கையாக விளைகிற மரங்களை வெட்டுவது பாவம் என்று சொன்னால் கூட இவர்களுக்குப் புரியும் - காலங்காலமாக வனத்தைப் பாதுகாத்து வந்தவர்கள் பழங்குடி மக்கள்தான். ஆனால் மரத்தை வெட்டுவது குற்றம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதே புரியாதவர்களுக்கு, அதைப் புரிய வைக்க மத்திய -மாநில அரசுகள் செய்தது என்ன?
இந்த மக்களை வெளியேற்றி, இவர்களது நிலங்களைக் கைப்பற்றி, இவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை. பெரும் நிலவுடைமையாளர்களிடம் குவிந்திருக்கும் நிலக்குவியலை உடைத்து உழைப்பாளிகளுக்கு விநியோகிப்பது என்ற கொள்கை கைகழுவப்பட்டு, விவசாயிகளிடம் பரவலாக இருக்கும் துண்டு நிலங்களைக் கைப்பற்றி கார்ப்பரேட்டுகளிடம் குவிக்கிற மத்திய அரசின் கொள்கைதான் கடந்த கால் நூற்றாண்டாக திணிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி பூர்வீக நிலத்தை இழந்து பிழைக்க வந்திருக்கிறவர்களுக்கு பாதுகாப்பும் வேலைவாய்ப்பும் அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. வனப்பகுதிக்குள் வந்தால் சுட்டுக்கொல்ல ஆந்திரா அரசு ஆணையிட்டிருக்கிறபோது அதை இந்த மக்களிடம் விளக்கி, மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசும் தவறியிருக்கிறது. அதனால்தான் செம்மரக் கடத்தல்காரர்களின் ஏஜெண்டுகள் பெரும் பணம் கூலியாகக் கொடுக்கிறபோது உயிரைப் பணயம் வைத்து இவர்கள் செல்கிறார்கள். மக்களைக் காப்பதில் மத்திய - மாநில அரசுகள் தோல்வியடைந்துவிட்டன என்பதன் வெளிப்பாடுதான் இது.
அதே போல் இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமயச் சூழலில் உலகின் பல பகுதிகளிலும் இனவாத, மதவாத வலதுசாரி சக்திகள் முனைப்புப் பெற்று வருகின்றன. இந்தியாவில் அது மதவாதமாக சாதியவாதமாக இனவாதமாக வெளிப்படுகிறது. மாற்றங்களுக்கான போராட்டங்களிலிருந்து மக்களை அது வெகுதூரம் பின்னுக்கு இழுக்கிறது என்ற ஏக்கம் எனக்கு உண்டு. ஆந்திரா காவல்துறையினரும் வனத்துறையினரும் கூலித்தொழிலாளர்களான தமிழர்களைத் தாக்கியதில், அங்கே வளர்க்கப்படுகிற இன வெறுப்பும் கலந்தே இருக்கிறது. அதற்கு எதிர்வினையாக இங்கேயும் இது இன மோதலாக வெடிக்கும் என்பது போன்ற, ஆந்திரத் தெலுங்கு மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக பிரதிபலிக்கிறது. இப்படி கூறுபோடப்படுவதில் சுரண்டல் சக்திகளும் ஆதிக்க சக்திகளும் குளிர்காய்கின்றன.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு அரசியல் உறுதி இருக்குமானால் உளவுத்துறையை முறையாகப் பயன்படுத்தி உண்மையான செம்மரக் கடத்தல் முதலாளிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறவர்களும் ஏஜென்டுகளும் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கறுப்புப் பணப் பேர்வழிகளின் பெயர்களை வெளியிடவும் இன்றைய அதிகார எந்திரம் தயாராக இல்லை, இப்படிப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சொல்லவும் தயாராக இல்லை.
மரம் வெட்டியவர்கள் தாக்கினார்கள் அதனால்தான் எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று என்று காவல்துறையினர் சொல்வதை ஒரு வாதத்திற்காக ஏற்பதானால், அப்படி உண்மையாகவே ஒரு மோதல் நடந்திருக்குமானால் ஓரிருவராவது உயிரோடு பிடிபட்டிருப்பார்கள். ஆனால் 20 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டா
No comments:
Post a Comment