நேற்று எரியும் பனிக்காடை மீண்டும் படிக்கச் தொடர்ந்தேன் ஆறுமணிநேர பயணத்தில் என்னால் 90பக்கங்கள் மட்டுமே புரட்ட முடிந்தது. இது ஒரு பெரிய காரியம் என்று சொல்ல நான் முற்பட வில்லை தொடர்ந்து படிந்து வந்தால் அந்த ஆறுமணி நேரத்தில் ஓட்டுமொத்த மீதம் இருக்கும் 150 பக்கங்களை முடித்துருப்பேன்.
படித்து முடிக்க சற்று தமதமாக காரணம் ஒரு களம் நோக்கி நாம் பயணிக்கும்போது அந்த களம் குறித்து நமக்கு முன்னணிபடிவினை இருந்து என்றால் நமக்கு அந்த நாவல் கூட ஒரு ஆவணமாக தென்படும். ஆனால் எந்த ஒரு அனுபவ நோக்கம் இல்லாமல் ஒரு புத்தகம் என்ற பெயரில் நாடும்போது அது படித்து முடிக்கும் ஒரு சுமையாகவே நமக்கு தெரியவரும். ஆனால் எனக்கு இந்த இரண்டு வகையோடு எனது ஓப்பிடை பொருத்தி பரக்கமுடியாது சற்று தமதமாக பக்கங்கள் திருப்ப காரணமகா அமைந்தது.
நான் படித்ததுறையில் கையாளப்படும் சில பயிற்சிமுறை எரியும் பனிக்காடில் பார்க்கமுடிந்தது. அவற்றில் மாதம்தோறும் மாற்றம் அடையும் தட்பவெட்பநிலை, வாழ்வாதார ஜீவனம் குறித்த போராட்டம், குடும்ப உறவுமுறை, உடல் ஆரோக்கிய தரம்,அருகில் இருக்கும் நிர்வாகங்களை பயன்படுத்தும் முறை, ஆங்கில தேசியவாத சுரண்டல் அடக்குமுறை அதன் பின்னியில் செயல்படும் கடும்வரட்சி மற்றும் அதை பயன்படுத்தும் மேஸ்தரிகள் இவற்றில் பயணிக்கும் குழு மாந்தர்கள் மற்றும் தனிமனித அடையாளங்களை தங்கள் வாழ்வியலோடு ஒப்பிடும் சில கதாபாத்திரங்கள் என எல்லா நபர்களோடு எதாவது ஒரு முறையில் பயணித்து இருப்பேன் என்றே தோன்றுகின்றது.
மிக குறிந்த கற்பனை ஓட்டம் ஆனால் அவை சொல்லும் உண்மை வேதனை மிக மிக அதிகம். மேஸ்தரிக்கு அவனது நரி கூட்டத்திற்கும் இந்த கூலிகள் என்றுமே தேவடியாமகனே அல்லது தேவடியாமகளே தான். இந்த நரி கூட்டம் தான் கூலிகளுக்கு பஞ்சாயத்து நடத்துகின்றது.. அங்கே இருக்கும் வெள்ளைகார துறைகளுக்கு வேண்டிய நேரத்தில் கரிதுண்டாக சாப்பிப்போடும் எலும்பாக பெண்களை பார்க்கும் குணம், அங்கே பணியாற்றும் எழுத்தார்கள் மத்தியில் உலவிவரும் தமிழர் ஓற்றுமை இப்படி பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஒரு சோக வரலாறுகள்.
உண்மையில் டாக்டர் பி.எச்.டேனியல் செய்த்து ஒரு மகத்தான வரலாற்று பணி அதை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது. இந்த ஒரு ஆவணம் இல்லை என்றால் வறுமையின் பிடியில் தமிழன் வாழ்ந்துள்ளான் இங்கே அவன் வறுமை தமிழன் என்பதால் நையபுடைக்கபட்டு, தீயில் சுட்டு தின்னப்பட்டான் என்ற வரலாறு தெரியாமல் போகி இருக்கும்.
மீதம் ஐம்பது பக்கம் இருக்கின்றது எனக்கோ இந்த எரியும் பனிக்காடு பக்கங்களை திருப்பும்போது சமிபத்தில் சுட்டுகொல்லப்பட்ட இருபது தமிழர்களை ஒப்பிட்டு பார்க்கமுடிந்தது, ஒரு அழமான அணுகுமுறை என்வசம் வந்துசென்றது.இருபினும் பொள்ளாச்சியை தாண்டிய குமரி மலையில் குளிர் வரும்போது எனக்கும் குளிர்ந்தது, அங்கே பெய்த மழையில் எனது கால்களும் நனைந்தது
படித்து முடித்தேன் எரியும் பணிக்காடு
ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஓவ்வொ துளி தேநீரிலும் கலந்திருக்கின்றது எமது உதிரம்.......
-ஆதவன் தீட்சண்யா
-ஆதவன் தீட்சண்யா
ஏனோ வள்ளி அந்த கருப்பனை விட்சென்று இருக்ககூடாது என்று மணம் சொல்கின்றது. புத்தம் முழுவதும் அழுகை மற்றும் பினஊர்வலங்கள்.
No comments:
Post a Comment