Thursday, April 23, 2015

ஓ காதல் கண்மணி யாருக்கு ?


நேற்று வெளியாகி இருக்கும் இயக்குனர் மணிரத்ணம் அவர்களின் ஓ காதல் கண்மணி ஒரு இயக்குனர் இளைஞர்களை நோக்கி இந்த ஏப்ரல் மாதம் எடுத்துவைக்கும் அடுத்தகட்ட காதல் குறித்த திரைப்படம் என்ற எண்ணத்தில் படம் பார்க்க விரும்புகின்றேன். காரணம் இன்றைய தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி இயக்குனர் மணிரத்ணம் அவர்கள் என்ன அரசியல் பேச வேண்டும், யாருக்காக பேசவேண்டும் அவரது ஆடியன்ஸ் யார் என்பதில் மிக தெளிவா இருக்கும் ஒரு நபர். இன்று அவர் எடுக்கும் திரைப்படம் தனக்கான ஒரு வட்டத்தில் இருந்து எதாவது ஒரு சிறு மற்றம் அடைந்து ஒரு தனி ரசிகன் வரை சென்று அடைந்துள்ளத என்பதை பார்க்க மிக அசைபடுகின்றேன். காரணம் தமிழ் சினிமாவில் இவர்கள் சொல்வது தான் சூத்திரம், தமிழ் சினிமா இவர்களை வைத்தே இயங்கும் என்ற பல அறைவேர்காடு விமர்சனம் பரப்புரை இன்றுவரை தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது ஆனால் இவர்கள் வடிவம் கொடுக்கும் மொழி யாரை சென்று அடைகின்றது என்பதே இங்கு கேள்வி.இயக்குனர் எந்த இடத்தில் இருந்து தனது புள்ளியை ஆரம்பிப்பாரோ அங்கே தான் ஓ காதல் கண்மணி இருப்பாள் அதே போல் படமும் அங்கே மட்டுமே விமர்சனமாக பேசப்படும். படம் பார்த்தபின் ஏதாவது புதுமை இருந்தால் கட்டாயம் எழுதுவேன்.

விமர்சனம் 
தான் பார்த்து பழகிய பார்ப்பன குடியின் அன்றாட எதார்த்த வாழ்க்கை இசையால் மடித்து கேமராவில் பதிந்து கொடுக்கப்பட்ட ஒரு கலவை படமே ஓ காதல் கண்மணி.

படத்தின் சிறப்பு அம்சம்.

ஓ காதல் கண்மணியின் தனி சிறப்பு இசைபுயல் எ.ஆர். ரகுமான் மற்றும் கேமரா சிறப்பு என்று சொல்ல முடியவில்லை காரணம் பெங்களூர் டேஸ் போன்ற படங்களில் வந்த காட்சி பதிவு மட்டுமே இதன் அடையாளமாக தெரிகின்றது.வழக்கம்போல இதுவும் ஒரு எ கிளாஸ் வாதிகளின் படம் 

No comments:

Post a Comment