Thursday, April 23, 2015

விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த சகாப்த கலைத்துவ புத்தகம்.


பிளாப் நடிகர் என்ற பெயரை ஆரம்பத்தில் இருந்தே சம்பாரித்த விக்ரம் ஒரு சிறந்த மேடைநாடக கலைஞன். எந்த ஒரு கதை களத்தையும் தன்னால் உள்வாங்கி (Adoptable Knowledge) நடிக்கும் ஒரு சிறந்த நடிகன். உதாரணம் பிதாமகன் படத்தின் கதையை பாலா எந்த தளத்தில் இருந்து ஒரு நடிகனிடம் சொல்லி இருக்க முடியும் அதே இயக்குனர் அவன் இவன் படத்தின் கதையை விஷாலிடம் எப்படி சொல்லி இருக்கமுடியும் என்பதை ஓப்பிட்டு பார்ப்பதும் மிக முக்கியம். ஒரு இயக்குனர் உடல் வடிவமைப்பை (CHARACTER DESIGNING ) கொண்டு வந்துவிட முடியும். ஆனால் அதில் இருந்து மிகவும் மாறுப்பட்டது உடல் மொழி (BODY LANGUAGE) இதை இரண்டையும் பொருந்தி நடிப்பவன் தான் (INTELLECTUAL ACTOR ) அந்த வகையில் விக்ரம் ஒரு சிறந்த அறிவுஜீவி நடிகன் என்பது மட்டும் உண்மை. இப்படி ஒரு சிறந்த ஆற்றல் மிக்க ஒரு ஏஜமானை இன்று வரை தமிழ் சினமா சரிவர பயன்படுத்த வில்லை என்ற வருத்தம் என்னை போல பல நெஞ்சகளில் உள்ளது காரணம். பிளாப் நடிகர் என்ற ஒரு பெயரை இன்று ஒரு கதாநாயகன் சுமக்க காரணம் இயக்குனர்கள் மட்டுமே ஒரு சிறந்த நடிகனை வைத்துகொண்டு ஒரு கதைதளத்தை உருவாக்க முடியாத இயக்குனர் வசமே ஒரு நடிகன் பிளாப் நடிகனாக என்ற பெயர் மாற்றம் அடைகின்றான் அதுபோல சினிமா அரசியல் இன்னும் ஒருபடி விக்ரமுக்கு கொடுத்த சறுக்கல்கள் பல பல.இன்னும் காலங்கள் இருக்கின்றது விக்ரம் என்ற கதாநாயகன் நடிகன் என்ற ஒரு மாற்று பாதை நோக்கி தமிழ் சினமாவை கொண்டு செல்ல. நாங்களும் இருக்கின்றோம் எங்கள் விக்ரமோடு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம் சார்

No comments:

Post a Comment