Thursday, April 23, 2015

சித்திரை வெண்கொற்றக்குடை திருவிழா என்பது கௌதம புத்தருக்கு(நீர்காத்த அய்யனார்) நடத்தப்படும் ஒரு முக்கிய திருவிழா

சித்திரை வெண்கொற்றக்குடை திருவிழா என்பது கௌதம புத்தருக்கு(நீர்காத்த அய்யனார்) நடத்தப்படும் ஒரு முக்கிய திருவிழா

தேவேந்திரர்களான குடும்பன்மார்:
கௌதம புத்தருக்கான ஆயிரக்கணக்கான பெயர்களில் ‘இந்திரன்’ என்பதும் ஒன்று. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட முனிவர் என்பதால் புத்தர், ’ஐந்திரன்’ என்று அழைக்கப்பட்டார். ’ஐ’, ’இ’யாக மருவியதால் ஐந்திரன், இந்திரனாக அழைக்கப்பட்டார் .தொல்காப்பிய பாயிரத்தில் பனம்பாரனார் தொல்காப்பியரை ‘ஐந்திரன் அறிந்தவன்’ என்று பாராட்டுவதை,தொல்காப்பியர் பௌத்த நெறிகளைக் கற்றவர் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும்.’இந்திரன்’, ‘இந்திரன்’ என்றழைக்கப்பட்ட புத்தர் தெய்வமாக மாற்றப்பட்டபொழுது அவரோடு தொடர்புடைய பல விஷயங்களும் பலவிதமாக மாற்றப்பட்டன. புத்தரின் பிறப்பை அறிவிக்கும் கதையில் இடம் பெறும் ஐராவதம் என்ற வெள்ளை யானை.இந்திரனின் வாகனமாகக் கற்பனை செய்யப்பட்டது. விவசாயத்தை மையப்படுத்திய நிலவுடைமைச் சமூகத்தின் சமயமாக பௌத்தம் 
கருதப்பட்டதால்,புத்தர்,அதாவது இந்திரன் மழைக்கான தெய்வமாகக் கருதப்பட்டார்.நீர் தானே விவசாயத்திற்கான அடிப்படை! ஆற்றில் புதுப்புனல் புரண்டோடும் காலத்தில் எடுக்கப்படும் கொண்டாட்டம் இந்திரவிழா என்று அழைக்கப்பட்டது.
யானையைப் போலவே வெண்ணிறமும் பௌத்தத்தின் சின்னமாகக் கருதப்பட்டது.அதனால் இந்திரவிழாவின்போது யானையின்மீது வெண்ணிற உடைஉடுத்தி,வெண்சாமரம் வீசி,வெண்குடை பிடித்து இந்திரனை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வருவது இன்றளவும் நடைபெறுகின்றது. ராஜபாளையம் நகரிலுள்ள தேவேந்திரகள் 'நீர்காத்த அய்யனார் என்றழைக்கப்படும் புத்தருக்கு இந்தச் சடங்கை இன்றைக்கும் செய்கின்றார்கள்.
திருநெல்வேலி நகரிலுள்ள தேவேந்திரர்கள் பேராற்று அம்மானுக்கு சிறிது காலம் முன்பு வரை இந்திரவிழா எடுத்துவந்தார்கள்.சிலப்பதிகாரத்தில் சித்திரிக்கப்படும் இந்திரவிழாவும் இதைப்போன்றவொரு பௌத்தவிழாவே! பௌத்த சமயத்தோடு தன்னை இணைத்துக்கொண்ட ‘குடும்பர்கள்’ தங்களை நெல்லோடு இந்த உலகிற்கு அனுப்பியது இந்திரனாகிய புத்தரே என்ற நோக்கத்தில் தங்களது பெயரையும்’தேவஇந்திரர்கள்’ என்று மாற்றிக் கொண்டனர்.இந்தப் புதிய அடையாளத்துடனேயே பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கத் துவங்கினர்.
இந்த வரலாற்றை நாம் பார்க்கும்போது ஏப்ரல் 14இல் உலகமே போற்றி புகழும் அறிவாசன் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் பிறந்தார் என்பதும் அதுபோல நாக்பூரில் சிலை வடிவம் கொண்ட வெள்ளையானை வணங்கி வருகின்றனர். இதை பொருத்தி பார்க்கும்போது கௌதம புத்தர் - புரட்சியாளர் அம்பேத்கர்- தேவேந்திர குல வேளாளர்கள் பற்றி நமக்கு ஒரு ஒப்பிடு கிடைக்கும் ஆகையால் நாளை 328வது சித்திரை வெண்கொற்றக்குடை திருவிழாவீல் அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றோம் மிக முக்கியம் இந்த திருவிழாவுக்கு செல்லும் முன்னர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டி மகிழ்ந்து விட்டு அனைவரும் ராஜபாளையம் நோக்கி செல்வோம்.
"வரலாற்றை விட வரலாற்று தலைவன் மிக முக்கியம்"





No comments:

Post a Comment